சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போகும் இடமெல்லாம் தேச பக்தி... மோடி புராணம் பாடி ஓட்டு கேட்கும் முதல்வர் பழனிச்சாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    போகும் இடமெல்லாம் மோடி புராணம் பாடும் முதல்வர்

    சென்னை: நாம் நிம்மதியாக வாழ வேண்டுமெனில் நிர்வாகத் திறமை மிக்கவரான மோடிதான் பிரதமராக வர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.

    அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தேசத்தை காக்க வேண்டும் என்று சொல்லி தே பக்தியை வெளிப்படுத்துவதோடு, அதற்கு மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என வாக்கு கேட்டு வருகிறார்.

    நல்லவனா இருக்கலாம்.. ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது.. ஆனா நீங்க பயங்கர நல்லவனா இருக்கீங்களே மோகன்!நல்லவனா இருக்கலாம்.. ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது.. ஆனா நீங்க பயங்கர நல்லவனா இருக்கீங்களே மோகன்!

    திறமையான மோடி

    திறமையான மோடி

    தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம் பாலுக்கு ஆதரவாக இன்று முதல்வர் பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். வள்ளூவர் கோட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, நாம் நிம்மதியாக வாழ வேண்டுமெனில் நிர்வாகத் திறமை மிக்க, வலிமை மிக்க பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்றார்.

    அதிமுக சாதனை

    அதிமுக சாதனை

    வள்ளுவர் கோட்டத்தை தொடர்ந்து சென்னை கோட்டூர்புரத்தில் முதல்வர் பழனிச்சாமி பேசுகையில், "திமுக 15 ஆண்டுகள் மத்தியிலே ஆட்சி பொறுப்பில் இருந்தும் எந்த பலனும் தமிழக மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் சொன்ன வாக்குறுதியின் படி மிக்சி, கிரைண்டர்களை ஏழை மக்களுக்கு வழங்கினார்.

    லேப் டாப் தந்தோம்

    லேப் டாப் தந்தோம்

    அதேபோல் விலையில்லா நோட்டு புத்தகங்கள், பள்ளிக்கு செல்ல சைக்கிள், விஞ்ஞான கல்வி ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக 37 லட்சம் பேருக்கு லேப் டாப்பினை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். நாங்கள் 15 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப் டாப் தரப்போகிறோம். அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்க வழிவகை செய்த அரசு ஜெயலலிதா அரசு. இப்படி ஏராளமான திட்டங்களை வழங்கி உள்ளோம். வழங்கப்போகிறாம்.

    திமுக மீது புகார்

    திமுக மீது புகார்

    அதேபோல் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் நாங்கள் செயல்படுத்தினோம். விரைவில் சென்னை மாநகர் முழுவதும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும், உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு போட்டு அதனை நடக்கவிடாமல் செய்ததே திமுக தான். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி போட்ட வழக்கால் தேர்தல் நடக்காமல் போனது" இவ்வாறு கூறினார்.

    மோடிதான் பிரதமர்

    மோடிதான் பிரதமர்

    சென்னை சூளையில் மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம் பாலுவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதே கூட்டணியின் நோக்கம் என்றும் மக்களின் நோக்கமும் அதுதான் என்றும் கூறினார். தயாநிதி மாறனுக்கு ஓட்டுபோட்டால் 5 வருடத்துக்கு ஒருமுறை தான் பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

    English summary
    TN CM Edappadi palanisamy give more important PM modi, his election campaign speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X