சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென சென்னைக்கு வந்த அமித் ஷா.. இரவோடு இரவாக சந்தித்த முதல்வர்.. 15 நிமிடம் ஆலோசனை

சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு சந்தித்து பேசினார்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு சந்தித்து பேசினார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" என்ற புத்தகம் இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட உள்ளது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த இரண்டு வருடங்களாக செய்த பணிகள் குறித்த ஆவண புத்தமாக இது வெளியாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த புத்தகத்தை வெளியிட இருக்கிறார்.

ராகுல் அவ்வளவு சொல்லியும்.. சோனியா காந்தியையே மீண்டும் இடைக்காலத் தலைவராக்கியது ஏன்?ராகுல் அவ்வளவு சொல்லியும்.. சோனியா காந்தியையே மீண்டும் இடைக்காலத் தலைவராக்கியது ஏன்?

சென்னை

சென்னை

இந்த விழாவில் கலந்து கொள்ளத்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தார். சென்னை வந்த அமித் ஷாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

எங்கு சந்திப்பு

எங்கு சந்திப்பு

இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக அமித் ஷா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். ஆளுநர் மாளிகையில் தனி அறையில் இந்த சந்திப்பு நடந்தது. 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு தொடர்ச்சியாக நடந்தது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இவர்கள் இதில் ஆலோசித்தனர்.

என்ன ஆலோசனை

என்ன ஆலோசனை

லோக்சபா தேர்தலுக்கு பின் முதல் முறை அமித் ஷாவும், முதல்வரும் சந்திப்பு நடத்தி இவ்வளவு நேரம் பேசி இருக்கிறார்கள். அதிமுகவிற்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று லோக்சபா தேர்தலுக்கு முன் பாஜக உறுதியளித்தாக கூறப்படுகிறது. அது குறித்து நேற்று ஆலோசனை நடந்ததாக தகவல்கள் வருகிறது.

என்ன பேசினார்கள்

என்ன பேசினார்கள்

அதேபோல் அதிமுக கட்சிக்குள் தற்போது சில உட்கட்சி பூசல்கள் நிலவி வருகிறது. கட்சிக்குள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிலர் காய்கள் நகர்த்துவதாக தகவல்கள் வருகிறது. இது குறித்தும் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்தார் என்று கூறுகிறார்கள்.

English summary
TN CM Edappadi Palanisamy meets Amit Shah in Chennai and discussed for 15 mins.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X