சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோழித்தீவனம் மக்காச்சோளத்திற்கு இறக்குமதி வரியை நீக்குங்க.. பிரதமருக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: முக்கிய கோழித் தீவனமாக மக்காச்சோளத்திற்கு கடும் பற்றாக்குறை நிலவுவதால் வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

கோழித் தீவனத்தில் முக்கியப் பங்கு வகிப்பது மக்காச் சோளம். இந்தியாவில் நிகழாண்டில் 80 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி சரிந்ததால், கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான மக்காச்சோளம், உக்ரைன் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து, சுமார் 4 லட்சம் டன் அளவில் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு கோழிப்பண்ணை சங்க தலைவரும் நாமக்கல் எம்பியுமான சின்ராஜ் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

வேலூரில் கதிர்ஆனந்தை வெல்ல வைப்பது எப்படி? ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வேலூரில் கதிர்ஆனந்தை வெல்ல வைப்பது எப்படி? ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கோழித்தீவனம்

கோழித்தீவனம்

இந்நிலையில் கோழிப் பண்ணையாளர்கள் மக்காசோளத்தை இறக்குமதி செய்ய இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்..

கோழி இறைச்சி

கோழி இறைச்சி

அந்த கடிதத்தில், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்டட மாவட்டங்களில் கோழி வளர்ப்பு வணிகம் நடந்து வருவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ந 3.5 முதல் 4 கோடி வரை அடுக்கு பறவைகள் கொண்ட பல்வேறு திறன்களில் சுமார் 1,000 முதல் 1,300 அடுக்கு பண்ணைகள் உள்ளது என்றும்.. 2013-14 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் முட்டை உற்பத்தியில் 23.5% மற்றும் கோழி இறைச்சியில் 30.53% என தமிழகம் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் தமிழக முதல்வர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசு ஊக்குவிப்பு

தமிழக அரசு ஊக்குவிப்பு

கோழி வளர்ப்பை தமிழக அரசு பெரிதும் ஊக்குவித்து வருகிறதாக கூறிய முதல்வர், கோழி இறைச்சியில் நான்காவது இடத்திலும் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் தமிழகம் உள்ளதாக தெரிவித்தார்.

கோழிப்பண்ணையாளர்கள் பாதிப்பு

கோழிப்பண்ணையாளர்கள் பாதிப்பு

அமெரிக்கன் படைப்புழு நோய் தாக்குதலால் நாடு முழுவதும் மக்காச் சோளத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோழி தீவனத்தில் 47 % மக்காச் சோளம் தான் உள்ளது என்றும் சோளம் விலை உயர்வால் கோழிப்பண்ணையாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு கடிதம்

பிரதமர் மோடிக்கு கடிதம்

கோழிப் பண்ணையாளர்கள் உற்பத்தி செய்யும் மக்காச் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும் என்றும் கோழிப் பண்ணையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்றும் முதல்வர் தனது கடித்தத்தில் வலியுறுத்தி உள்ளார்.

English summary
Central government should Remove import duty on maize , tn cm edappadi palanisamy written letter to pm modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X