சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கையால் 36 தமிழக மீனவர்கள் கைது- பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

ராமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 36 மீனவர்களை இலங்கை கடற்படை அண்மையில் கைது செய்தது. இவர்கள் அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

TN CM Edappadi Palaniswami writes to PM Modi on TN fishermen arrest

மீனவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதான் கூட்டணி? ஒரே எம்ஜிஆர் பாடலை ஒரே நாளில் பாடி எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்- கமல்ஹாசன்இதுதான் கூட்டணி? ஒரே எம்ஜிஆர் பாடலை ஒரே நாளில் பாடி எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்- கமல்ஹாசன்

இந்த நிலையில் இலங்கையால் கைது செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்களையும் அவர்களது 5 படகுகளையும் விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

English summary
Tamilnadu CM Edappadi Palaniswami wrote to PM Modi on TN fishermen arrested by Srilanka Navy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X