சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை!

அடுத்த வாரம் வெளிநாடு செல்லும் தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது பொறுப்புகளை யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    யாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. முதல்வர் தீவிர ஆலோசனை!- வீடியோ

    சென்னை: அடுத்த வாரம் வெளிநாடு செல்லும் தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது பொறுப்புகளை யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாத இறுதியில் வெளிநாடு பயணம் செல்கிறார். இதனால் தற்போது அதிமுகவில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அமெரிக்கா மற்றும் பிரிட்டன் செல்கிறார். ஆகஸ்ட் 28ம் தேதி முதல்வர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 12ம் தேதி வரை அவர் தமிழகம் வர மாட்டார் என்று கூறப்படுகிறது.

    கைமாறியது ஜெயலலிதாவின் ஃபேவரைட் சொத்து!கைமாறியது ஜெயலலிதாவின் ஃபேவரைட் சொத்து!

    கேள்வி

    கேள்வி

    14 நாட்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இங்கு இருக்க மாட்டார். இதனால் அந்த 14 நாட்கள் முதல்வரின் பொறுப்பை யார் கவனிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வரின் பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமி யாரிடம் கொடுக்க போகிறார், இதனால் அதிமுகவில் என்ன பிரச்சனை வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கவனம்

    கவனம்

    முதல்வர் பொறுப்பை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கவனிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. அப்படி இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான தங்கமணி அல்லது வேலுமணி போன்ற அமைச்சர்கள் முதல்வர் பொறுப்பை கவனிப்பார்களா என்றும் விவாதம் எழுந்துள்ளது.

    ஆலோசனை செய்கிறார்கள்

    ஆலோசனை செய்கிறார்கள்

    இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது பொறுப்புகளை யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. தலைமைச் செயலாளர் கே. சண்முகம், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் இதில் கலந்து கொண்டார்.

    என்ன வாய்ப்பு

    என்ன வாய்ப்பு

    பெரும்பாலும் முதல்வர் பழனிச்சாமி தனது பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். அமைச்சர்கள் அவர்கள் பொறுப்பை கவனிக்க வேண்டும். முதல்வரின் அமைச்சரவை பொறுப்பை அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள் என்று தகவல்கள் வருகிறது. பிரச்சனை வேண்டாம் என்று முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    TN CM Foreign Trip: Who will control the government? Meeting underway to choose the person.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X