India
 • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதத்தால் தமிழர்களை பிளவு படுத்த முடியாது..தமிழால் இணைவோம் - மு.க ஸ்டாலின் உறுதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக மதத்தைப் பயன்படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதியையும், மதத்தையும் தாண்டி மொழியால் இணைக்கும் வல்லமை தமிழுக்கு உண்டு என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரு இனத்தின் அரசாக திமுக அரசு அமையும் என்றும் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான "ஃபெட்னா" அமைப்பின் 35-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3 நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் ஒட்டுமொத்தமான அமைப்பான - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான "ஃபெட்னா" அமைப்பைச் சார்ந்த - அதன் அமைப்பாளர் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் தாய் வீடு

தமிழகம் தாய் வீடு

அப்போது பேசிய அவர், ' உலகின் மிக மூத்த மொழிகளில் முதல் மொழியான தமிழுக்கு சொந்தக்காரர்கள் நாம்.ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் தமிழினம், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கைகளில் வாழ்கிறார்கள்.
தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும் தமிழ்நாடு தான் தாய் வீடு.உலகம் முழுவதும் பரந்து, விரிந்து வாழும் இனம் தமிழினம். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்.

கண்ணீரை துடைப்போம்

கண்ணீரை துடைப்போம்

தமிழ்நாடு என பெயர் சூட்டியது திமுக அரசு தான். ஸ்ரீ என்பதற்கு பதிலாக திரு, ஸ்ரீமதி என்பதற்கு பதிலாக திருமதி என கொண்டு வந்தது திமுக ஆட்சி தான்.தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தது திமுக அரசு. தமிழன் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவன் கண்ணீரை துடைக்க குறிக்கோள் கொண்டுள்ளது திமுக அரசு.

 இனத்தின் அரசு

இனத்தின் அரசு


ஒரு இனத்தின் அரசாக திமுக அரசு அமையும். திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனத்தின் பெயராக இருந்தது. ஓராண்டாக ஒரு இயக்கத்தின் பெயராக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. திராவிடம் சென்ற சொல்லை திட்டமிட்டு தான் குறிப்பிட்டு வருகிறேன்.

எதிரிகளை இனம் காண்போம்

எதிரிகளை இனம் காண்போம்

தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது திமுக அரசு தான். எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டிற்கு எதிரான நபர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். இத்தகைய எதிரிகள் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்கிறார்கள். அவர்களை இனங்கண்டு கொள்வோம். உங்கள் அனைவரது செயல்பாடுகளும் தமிழை, தமிழினத்தை, தமிழர்களை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். நம்மைப் பிளவுபடுத்தும் எண்ணங்களை பின்னுக்குத் தள்ளி, நம்மை இணைக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாக உங்களது செயல்கள் அமைய வேண்டும்!

ஒரு தாய் மக்கள்

ஒரு தாய் மக்கள்

தமிழகத்தில் இருக்கும் பிளவுகளுக்கு வெளிநாடுகள் சென்ற பிறகும் முக்கியத்துவம் தராதீர்கள்! ஒருதாய் மக்களாக வாழுங்கள்! கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள்! எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை என்பதைப் போல தமிழை - தமிழ்நாட்டை விட்டுவிடாதீர்கள்! இன்று நாம் முன்னெடுக்க வேண்டிய இயக்கமானது 'தமிழால் இணைவோம்' என்பதாகும்.

மொழியால் இணைக்கும் வல்லமை

மொழியால் இணைக்கும் வல்லமை

மத மாய்மாலங்களையும் சாதிச் சழக்குகளையும் வீழ்த்தும் வல்லமை மொழிக்குத்தான் உள்ளது. மதம் என்று நான் சொல்லும்போது, யாருடைய இறைநம்பிக்கையையும் நான் சொல்லவில்லை. இறைநம்பிக்கை என்பது அவரவர் சிந்தனை! விருப்பம்! உரிமை! அதில் ஒருநாளும் தலையிடமாட்டோம். அதே நேரத்தில், தமிழர்களைப் பிளவுபடுத்தும் கருவியாக மதத்தைப் பயன்படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம்

சாதிக்கு அத்தகைய சமாதானத்தைச் சொல்ல முடியாது. சாதி என்பது தமிழினத்தைப் பிளவுபடுத்தும் முதலாவது சக்தியாக இருக்கிறது. அதனால்தான் 'சாதியை ஒழித்தல் ஒன்று, தமிழை வளர்த்தல் மற்றொன்று' என்று பாவேந்தர் பாடினார். அதனால்தான், ‘தமிழால் இணைவோம்'என்பதை நமது முழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

  முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு: Investment Conclave-ல் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை
  தமிழர் என்ற உணர்வு

  தமிழர் என்ற உணர்வு

  சாதியால், மதத்தால் தமிழர்களைப் பிரிக்கும் சக்திகள் அதிகமாகி வரும் சூழலில் நாம் அனைவரும் ஒன்றுசேர்வதற்கு, நம்மை ஒருங்கிணைக்கும் ஆற்றல் தமிழ்மொழிக்கு மட்டும்தான் இருக்கிறது! உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் - பல்லாயிரம் மைல் கடந்தும் இன்று நாம் ஒன்றாகக் கூடியிருக்கிறோம் என்றால் - தமிழர் என்ற உணர்வோடு நாம் கூடி இருக்கிறோம். நம்மை நாடுகள் பிரிக்கலாம்! நிலங்கள் பிரிக்கலாம்! ஆனாலும், மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு. அந்த மொழியை வளர்ப்போம்! தமிழினத்தைக் காப்போம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  English summary
  TamilNadu Chief Minister M. K. Stalin has said that it was the Dravidian movement that fought to protect the Tamil language. Chief Minister Stalin also said that Tamil has the power to unite people through language beyond caste and religion.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X