சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குறட்டைவிடும் உளவுத்துறை- கொட்டம்போடும் கொலையாளிகள்... கோட்டையில் ரெடியாகும் சாட்டை!

Google Oneindia Tamil News

சென்னை: மாவட்டங்களில் உளவுத்துறையினர் செயல்பாடுகளால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக கடுமையான அதிருப்தியில் இருக்கிறாராம். இதனால் உளவுத்துறையில் மிகப் பெரிய அதிரடி மாற்றங்கள் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்கின்றன செயின்ட் ஜார்ஜ் கோட்டை வட்டாரங்கள்.

சென்னை முதல் குமரி வரை திடீரென கொலை, கொள்ளை, கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதுவும் தலையை துண்டித்து எடுக்கும் கூலிப்படையின் கொடூரத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லையில் நடந்த பழிக்கு பழி கொலைகள், திண்டுக்கல் பழிக்கு பழி கொலைகள், வாணியம்பாடி படுகொலை ஆகியவை தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது. திமுக ஆட்சியில் வன்முறை சம்பவங்கள் தலைதூக்குகின்றன என்கிற விமர்சனமும் எழத் தொடங்கிவிட்டது.

அடுத்தடுத்து 2 அறிவிப்புகள்.. நெருங்கும் பண்டிகைகள்.. பெருகும் தொற்று பாதிப்பு.. மத்திய அரசு அதிரடிஅடுத்தடுத்து 2 அறிவிப்புகள்.. நெருங்கும் பண்டிகைகள்.. பெருகும் தொற்று பாதிப்பு.. மத்திய அரசு அதிரடி

ஓபிஎஸ் அறிக்கை

ஓபிஎஸ் அறிக்கை

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 10 நாட்களாக ஆங்காங்கே கொலைக் குற்றங்கள் நிகழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது. கடந்த 10 நாள்களாக ஆங்காங்கே கொலைக் குற்றங்கள் நிகழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது என சுட்டிக்காட்டி இருந்தார். இப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தால் அதுவும் உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் சிக்கலாகிவிடுமே என முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம்.

உளவுத்துறை மீது அதிருப்தி

உளவுத்துறை மீது அதிருப்தி

இதனால் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னதான் உளவுத்துறை செய்து கொண்டிருக்கிறது... குற்றச்செயல்கள் நடக்கப் போகிறது..அல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது என உளவுத்துறைக்கு முன் கூட்டி தெரிகிறதா? இல்லையா? என்ற கேள்வியை உயரதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். அப்போது உளவுத்துறை தொடர்பான சில விவரங்கள் முதல்வர் ஸ்டாலினிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

Recommended Video

    Tamilnadu முழுவதும் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட ரவுடிகள்.. Sylendra Babu அதிரடி நடவடிக்கை
    ஜாதி ஆதிக்கம்

    ஜாதி ஆதிக்கம்

    அதாவது மாவட்ட அளவில் உளவுத்துறையினர் செயல்பாடு பெரும்பாலும் திருப்தி தரவில்லை. அதிலும் குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.. அதனால் குற்றங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் எதுவும் உளவுத் துறையிடம் இருந்து வருவதே இல்லை. இதில்தான் அடிப்படையில் மாற்றம் தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அந்த உயர் அதிகாரிகள் எடுத்து காட்டி இருக்கின்றனர்.

    விரைவில் அதிரடி மாற்றம்

    விரைவில் அதிரடி மாற்றம்

    இதையடுத்து மாவட்ட உளவுத் துறையில் மிகப் பெரிய மாற்றம் எந்த நேரத்திலும் நடக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே தமிழக காவல்துறை உயரதிகாரிகள் 10 பேர் நேற்று மாற்றப்பட்டனர். இந்த மாறுதலில் அமைச்சர்கள் சிலரின் சிபாரிசுகளும் அடங்கும். குறிப்பாக அமைச்சர் கே.என்.நேருவின் விருப்பத்தை ஏற்று அவரது சிபாரிசை நிறைவேற்றியுள்ளார் முதல்வர். ஸ்டாலின் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

    English summary
    TN CM M.K.Stalin upsets over Intelligence Department Sources said that Tamilnadu Chief Minister M.K.Stalin was very upset over the Intelligence Department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X