சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நான் ஸ்டாலின் பேசுறேன்".. திடீரென கொரோனா வார் ரூமிற்கு விசிட் அடித்த முதல்வர்.. ப்பா மாஸ் சம்பவம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு திடீரென சென்னையில் உள்ள கொரோனா வார் ரூமிற்கு சென்று பார்வையிட்டது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மிக சிறப்பாக செய்து வருகிறார். ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, மற்ற விஷயங்கள் மீது பெரிதாக கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தி வருகிறார்.

5 கோடி டோஸ்களை தயாரிக்கும் சைடஸ் கேடில்லா.. இந்தியாவில் வேகமெடுக்கும் வேக்சின் உற்பத்தி.. குட்நியூஸ் 5 கோடி டோஸ்களை தயாரிக்கும் சைடஸ் கேடில்லா.. இந்தியாவில் வேகமெடுக்கும் வேக்சின் உற்பத்தி.. குட்நியூஸ்

முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை கலைந்து, ஸ்டாலின் மிகவும் அதிரடியாக அறிவிப்புகள் மற்றும் முடிவுகளை எடுத்து வருகிறார்.

எப்படி

எப்படி

அதன் ஒரு கட்டமாக முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு திடீரென சென்னையில் உள்ள கொரோனா வார் ரூமிற்கு சென்று பார்வையிட்டது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள டிஎம்எஸ் மருத்துவம வளாகம் என்று அழைக்கப்படும் மருத்துவ மற்றும் கிராம சுகாதார சேவைகள் இயக்குநரகத்தில் இந்த கொரோனா வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

வார் ரூம்

வார் ரூம்

இங்கு கொரோனா நோயாளிகளுக்கு பெட் ஒதுக்குவது, ஆக்சிஜன் தேவையை கண்காணிப்பது, புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பது என்று பல முக்கிய விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போன் செய்து உதவி கேட்கும் மக்களுக்கு வார் ரூமில் உடனுக்குடன் உதவி செய்யப்பட்டு, தீர்வுகள் வழங்கப்படுகின்றன. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் இந்த வார் ரூம் தொடங்கப்பட்டது.

விசிட்

இந்த நிலையில் இன்று இரவு 10.30 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் இங்கு திடீர் விசிட் அடித்துள்ளார். வார் ரூம் எப்படி இயங்குகிறது என்று பார்த்துள்ளார். அதிகாரிகள் வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது முன்னறிவிப்பு இன்றி ஸ்டாலின் திடீர் விசிட் அடித்து சோதனை செய்துள்ளார். அவர்களின் பணியை மேற்பார்வையிட்டு இருக்கிறார்.

பேசினார்

பேசினார்

அதோடு இரவு பகல் பாராமல் உழைக்கும் அவர்களிடம் சாந்தமாக பேசி இருக்கிறார். அப்போது அங்கு வந்த போன் ஒன்றை எடுத்து பேசி இருக்கிறார். பெட் உதவி கேட்டு போன் செய்த நபரிடம் நான் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன் என்று கூறியுள்ளார். ஸ்டாலினிடம் பேசிய அந்த நபர் தனது உறவினருக்காக ஆக்சிஜன் படுக்கை கேட்டுள்ளார்.

சிறப்பு

உடனே படுக்கை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று ஸ்டாலின் அவரிடம் உறுதி அளித்துள்ளார். அதோடு எம்எம்சி மருத்துவமனையில் படுக்கையும் ஏற்பாடு செய்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் இப்படி திடீரென வார் ரூமிற்கு விசிட் அடித்த சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு முதல்வர் இப்படி நேரடியாக களப்பணிகளை கண்காணிப்பது மக்களிடையே கைதட்டுகளை பெற்றுள்ளது.

English summary
TN CM M K Stalin visited Corona war room in Chennai: Picked up a random call and helped people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X