சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

TN CM MK Stalin: திமுக இளைஞர் குழு தொடங்கி முத்துவேல் கருணாநிதி மு.க ஸ்டாலின் எனும் நான் வரை

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுள்ளார். திமுக இளைஞரணி தொடங்கி படிப்படியாக கட்சியிலும் வளர்ச்சியடைந்து முதல்வராக பதவியேற்றுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வராக பதவியேற்றார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். திமுகவில் இளைஞரணி தொடங்கி தலைவர் வரை கட்சிப்பதவியிலும் எம்எல்ஏ தொடங்கி துணை முதல்வர் வரை ஆட்சியிலும் பல பதவிகளை படிப்படியாக பெற்று இன்றைக்கு முதல்வராக பதவியேற்றுள்ளார். மு.க ஸ்டாலின் கடந்த 50 ஆண்டுகாலத்தில் சந்தித்த சாதனை பயணங்களைப் பார்க்கலாம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று அவர் உச்சரித்த போது திமுக தொண்டர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது.

Recommended Video

    திமுக தலைவர் முக ஸ்டாலின் - வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியல் பயணம்

    மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் மார்ச் 1, 1953-ம் ஆண்டு மூன்றாவது மகனாக பிறந்தார் மு.க.ஸ்டாலின். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் நினைவாக இவருக்கு இந்தப் பெயரை சூட்டினார் கருணாநிதி. இவரின் மனைவி துர்கா. இவர்களுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் இருக்கிறார்கள்.

    14 வயதில் அரசியல் களம் கண்ட ஸ்டாலின், தனது 68-வது வயதில் முதலமைச்சர் பதவியை அடைந்திருக்கிறார். நீண்ட நெடிய வரலாறுகொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை, தனது தந்தை கருணாநிதியின் மறைவுக்குப் பிறகும் கட்டிக் காத்து வெற்றிபெறச் செய்திருக்கிறார் ஸ்டாலின்.

    அரசியல் ஆர்வம்

    அரசியல் ஆர்வம்


    1953ஆம் ஆண்டு சோவியத் தலைவர் ஸ்டாலின் மறைந்த வாரத்தில் கருணாநிதிக்கு மகனாகப் பிறந்தார். அதன் காரணமாகத்தான் தன் மகனுக்கு ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி. பிறந்தநாள் தொட்டே அரசியல் தலைவர்கள் பலராலும் தூக்கி வளர்க்கப்பட்ட காரணத்தால் சிறுவனாக இருக்கும்போதே ஸ்டாலினை அரசியல் ஆர்வம் தொற்றிக்கொண்டது.
    1953ஆம் ஆண்டு சோவியத் தலைவர் ஸ்டாலின் மறைந்த வாரத்தில் கருணாநிதிக்கு மகனாகப் பிறந்தார். அதன் காரணமாகத்தான் தன் மகனுக்கு ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி. பிறந்தநாள் தொட்டே அரசியல் தலைவர்கள் பலராலும் தூக்கி வளர்க்கப்பட்ட காரணத்தால் சிறுவனாக இருக்கும்போதே ஸ்டாலினை அரசியல் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

    அரசியல் பயணம்

    அரசியல் பயணம்

    1966ஆம் ஆண்டு, தனது 14வது வயதில் கோபாலபுரம் தி.மு.க இளைஞர் குழு என்ற சிறு குழுவை கோபாலபுரத்தில் தொடங்கினார் ஸ்டாலின். இந்தக் குழு மூலம் இளைஞர்களை ஒன்று திரட்டி திராவிடக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்தார். சமூகப் பணிகளையும் இந்தக் குழு செய்துவந்தது.

    கல்லூரி வாழ்க்கை

    கல்லூரி வாழ்க்கை

    சென்னை சேத்துப்பட்டிலுள்ள கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். பின் விவேகானந்தா கல்லூரியில் பி.யூ.சி படிப்பையும், மாநிலக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்காக முதன்முறையாக 18 வயதில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    மிசாவில் கைது

    மிசாவில் கைது

    1974ஆம் ஆண்டு தி.மு.க-வின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1976ஆம் ஆண்டில் எமெர்ஜென்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, சிறை சென்றார். கைதாகிறார் ஸ்டாலின்' என்ற செய்தி தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பரவியதால் கோபாலபுரத்தில் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலினைக் கைதுசெய்து அழைத்துச் சென்றது காவல்துறை. சிறையில் பட்ட அடிகள் வலிகள் மு.க ஸ்டாலினுக்கு அரசியல் பாடத்தை கற்றுக்கொடுத்தது. சென்னை மத்தியச் சிறையில் ஓராண்டு காலத்தைக் கழித்தார் ஸ்டாலின். சிறையில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்த ஸ்டாலின், மூத்த அரசியல் தலைவர்களின் நெருக்கத்தையும் பெற்றார்.

    இளைஞர் அணி அமைப்பாளர்

    இளைஞர் அணி அமைப்பாளர்

    1980, ஜூன் 26ஆம் தேதி மதுரை ஜான்ஸி பூங்காவில் திமுக இளைஞர் அணியைத் தொடங்கிவைத்தார் கருணாநிதி. இரண்டு ஆண்டு காலம் நிர்வாகிகள் இல்லாமல் செயல்பட்ட இளைஞரணியின் அமைப்பாளராக, 1982ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின்.

    திராவிட கொள்கை

    திராவிட கொள்கை

    தந்தையின் தாக்கத்தால், இளம் வயதிலேயே ஸ்டாலினுக்கு நாடகக்கலை மற்றும் அரசியலில் ஆர்வம் இருந்தது. இவர் நடித்த முதல் நாடகமான முரசே முழங்கு' வெற்றிவிழா கண்டது. அதைத் தொடர்ந்து திண்டுக்கல் தீர்ப்பு', நீதி தேவன் மயங்குகிறான்', நாளை நமதே' என திராவிடக் கொள்கைகளை விளக்கும் பல நாடகங்களிலும் நடித்துள்ளார். இதேபோல, திரைத்துறையிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ஸ்டாலின், ஒரே இரத்தம்', மக்கள் ஆணையிட்டால்' ஆகிய திரைப்படங்களிலும் குறிஞ்சி மலர்' என்ற நெடுந்தொடரிலும் நடித்துள்ளார்.

    முதல் தேர்தல்

    முதல் தேர்தல்

    1984 ஆம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1989-ம் ஆண்டு மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதுதான் அவரது கடைசி தோல்வி. அதற்கடுத்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் மேயர்

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் மேயர்

    1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஜெயித்த கையோடு, சென்னை மாநகராட்சியின் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் அவர்தான். கடந்த 2001ஆம் ஆண்டு மீண்டும் சென்னையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டு இரட்டைப் பதவிக்கு எதிராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டம் கொண்டுவர, மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏவாகப் பணியைத் தொடர்ந்தார்.
    இவர் மேயராக இருந்த காலகட்டத்தில்தான் சென்னையை, சிங்கார சென்னை' என்று அழைக்கத் தொடங்கினர்.

    துணை முதல்வர் மு.க ஸ்டாலின்

    துணை முதல்வர் மு.க ஸ்டாலின்

    தொடர்ந்து 2006ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றதை அடுத்து முதன்முறையாக அமைச்சர் பொறுப்பேற்றார் ஸ்டாலின். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்துவந்தவர், 2009ஆம் ஆண்டு துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டார். 2011, 2016 தேர்தல்களில் வெற்றிபெற்று எம்எல்ஏவாகத் தேர்வானார்.

    திமுகவின் தலைவர்

    திமுகவின் தலைவர்

    2016 முதல் தமிழக சட்ட சபையின் எதிர்க்கட்சித் தலைவராகச் பணியாற்றி வந்தார் ஸ்டாலின். 2017ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு தி.மு.க பொதுக்குழுவின் மூலம் அக்கட்சியின் செயல் தலைவரானார்.
    கடந்த 2018 ஆம் தி.மு.க தலைவர் கருணநிதியின் மறைவுக்குப் பிறகு, திமுக தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    மு.க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர்

    மு.க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர்

    கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, தமிழகத்தில் ஓர் இடத்தைத் தவிர்த்து மற்ற 38 இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கடந்த 2 ஆண்டு காலமாக மாநிலம் முழுவதும் பயணித்து மக்களை சந்தித்தார் ஸ்டாலின். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் ஸ்டாலின்.

    மு.க ஸ்டாலின் ஆகிய நான்

    மு.க ஸ்டாலின் ஆகிய நான்

    சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று 159 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. 133 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றுள்ளார் மு.க ஸ்டாலின். அவருடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். முதல்வர் ஸ்டாலினுக்கு முதல் சவாலாக நிற்கிறது கொரோனா பெருந்தொற்று. பேரிடர் சூழலில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கும் நிலையில் முதல்வர் பதவி ஏற்றுள்ளார்.

    English summary
    DMK leader MK Stalin has taken over as chief minister. Starting with the DMK youth, he gradually grew in the party and became the Chief Minister. Muthuvel Karunanidhi Stalin knowns as M.K. Stalin was born on 1st March 1953 as the third son to the prominent Dravidian leader and five-time chief minister of Tamilnadu, Kalaignar M. Karunanidhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X