சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலின் அதிரடி.. அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகள் ரத்து.. எந்தெந்த தலைவர்கள் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகளை ரத்து செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி அ.தி.மு.க ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

TN CM MK Stalin has ordered the immediate dismissal of 130 defamation cases against Tamil Nadu political leaders

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் E.V.K.S. இளங்கோவன் மற்றும் விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், G. ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் திருவாளர்கள் பழ.கருப்பைய்யா மற்றும் நாஞ்சில் சம்பத், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், கணேசன்,

(RSYF), திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாளர்கள் K.N. நேரு மற்றும் S.M. நாசர், பாராளுமன்ற உறுப்பினர்கள் M.K.கனிமொழி, திருவாளர்கள் தயாநிதிமாறன். R.S. பாரதி. S.R.பார்த்திபன் மற்றும் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆகியோர் மீது சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Chief Minister MK Stalin has ordered the immediate dismissal of 130 defamation cases against Tamil Nadu political leaders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X