சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மு.க ஸ்டாலினுக்கு ராசியான 7 ஆம் எண்: 133 எம்எல்ஏக்கள்... 34 அமைச்சர்களுடன் 7ஆம் தேதி பதவியேற்பு

மு.க ஸ்டாலின் முதல்வராக இன்று தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 133 எம்எல்ஏக்கள் ஆதரவுடன், 34 அமைச்சர்களுடன் முதல்வராக அரியணையில் ஏறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சிலருக்கு சில நம்பிக்கைகள் இருக்கும் அந்த நம்பிக்கையின் படி நடந்தால் வெற்றி கிடைக்கும். அது போலத்தான் சிலருக்கு சில எண்கள் ராசியாக இருக்கும். தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்றைய தினம் 7ஆம் தேதி தொடங்கி அவருக்கு எல்லாமே 7 ஆம் எண்ணாக வரும் வகையில் அமைந்துள்ளது. 133 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அவர் உட்பட 34 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

'முத்துவேல் கருணாநிதி எனும் நான்'... என்று உச்சரித்து முதல்வராக மே 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை 9 மணிக்கு நல்ல நேரத்தில் ஏகாதசி திதியும் குருபகவான் ஆசி நிறைந்த பூரட்டாதி நட்சத்திரத்தில் சித்தயோகமும் கூடிய சுப தினத்தில் முதல்வராக பதவியேற்றுள்ளார் மு.க ஸ்டாலின்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: கருணாநிதி தொடங்கி ஸ்டாலின் அமைச்சரவை வரை அசாத்திய பயணம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: கருணாநிதி தொடங்கி ஸ்டாலின் அமைச்சரவை வரை அசாத்திய பயணம்

எண்ணியல் ஜோதிடப்படி 7ஆம் எண் கேதுவிற்கு உரியது. 7ஆம் எண் ஆத்மார்த்தமானது. வெற்றியைத் தேடித்தரக்கூடியது. இந்த எண்ணுக்கு நட்பு எண்கள் 8,6,5, பகை எண்கள் 1,2,9.

பெருமாளுக்கு உகந்த ஏகாதசி

பெருமாளுக்கு உகந்த ஏகாதசி

இன்றைய தினம் ஏகாதசி திதி. பெருமாளுக்கு உகந்த திதி. சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசி பாப விமோசினி ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் செய்யும் நற்காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

9 மணிக்கு நல்ல நேரம்

9 மணிக்கு நல்ல நேரம்

வெள்ளிக்கிழமை காலை 8.45 மணிக்கு சந்திர ஹோரையில் வீட்டை விட்டு புறப்பட்டார் மு.க ஸ்டாலின். சனி ஹோரையில் அவர் முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று உச்சரித்து முதல்வராக பதவியேற்றார். வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிவரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

7 ராசி எண்

7 ராசி எண்

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எல்லாமே 7 வரும் வகையில் அமைந்துள்ளது. 7ஆம் தேதி, 133 எம்எல்ஏக்கள் ஆதரவு, மொத்தம் 34 அமைச்சர்கள் என கூட்டுத்தொகை 7 வரும் வகையில் அமைந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் 7 உறுதிமொழிகளை அளித்துள்ளார்.

முதல்வர் நாற்காலி

முதல்வர் நாற்காலி

சவாலான காலத்தில் மு.க ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். அவரது பத்தாண்டு கனவு நிறைவேறியுள்ளது. தமிழகத்தை சாதனை மாநிலமாக மாற்றுவேன் என்று கூறி 7 உறுதிமொழிகளை அளித்துள்ளார் மு.க ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அவர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். கொரோனா நோய் தொற்று காலத்தில் சவால்களை சந்தித்து சாதனைகளாக மாற்றுவார் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மக்களுக்கு அதிகம் உள்ளது.

English summary
DMK leader MK Stalin, who has taken over as the Chief Minister of Tamil Nadu, is all set to become his No. 7 starting today, the 7th. With the support of 133 MLAs, 34 ministers have been sworn in, including them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X