சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுனில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லாக்டவுனில் கூடுதல் தளர்வுகளை செயல்படுத்துவது தொடர்பாக இன்று மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் உச்சமாக இருந்தது. இதனால் மே 24-ம் தேதி முதல் மே 31 வரை முழு லாக்டவுன் அமல்படுத்தபப்ட்டது. இந்த லாக்டவுன் ஜூன் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

TN CM MK Stalin to hold discuss on lockdown exemptions

இந்த லாக்டவுனால் கொரோனா பாதிப்பில் சற்று குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் ஜூன் 14-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது. முழு லாக்டவுன் செயல்படுத்தப்பட்டதால் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது.

இதனால் லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 11 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு நேரக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தளர்வுகளுடனான லாக்டவுன் நாளை மறுநாள் முடிவடைகிறது.

Recommended Video

    MK Stalin Car-க்கு அடியில் எலுமிச்சை? | Lungi-யில் Stalin

    தற்போது தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரமாக குறைந்துள்ளது. அதேபோல் ஒருநாள் கொரோனா மரணங்களும் கணிசமாக குறைந்திருக்கிறது.

    உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103 உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103

    இந்த நிலையில் லாக்டவுனில் மேலும் தளர்வுகளை செயல்படுத்துவது தொடர்பாக இன்று மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இன்றைய கூட்டத்தில் கொரோனா அதிகம் பாதித்திருந்த 11 மாவட்டங்களில் தளர்வுகளை செயல்படுத்துவது தொடர்பாக முதலில் ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது.

    English summary
    Tamilnadu Chief Minister MK Stalin will hold discuss on lockdown exemptions today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X