சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 நாட்கள் டைம்.. சென்னை முழு லாக்டவுனில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? தமிழக அரசு செம யோசனை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் முழு லாக்டவுன் பிறப்பிக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இதில் மக்களுக்கு சாதகமான சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

Recommended Video

    சென்னை முழு லாக்டவுனில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா?

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னையில் மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்படும் கேஸ்களில் 80% கேஸ்கள் தினமும் சென்னையில் இருந்துதான் வருகிறது.

    இதனால் சென்னையில் மீண்டும் லாக்டவுனை கொண்டு வர வேண்டும். சென்னையில் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    கடந்த 2 வாரம்தான் மிக மோசம்.. தினமும் 1 லட்சம் கேஸ்கள்.. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா! கடந்த 2 வாரம்தான் மிக மோசம்.. தினமும் 1 லட்சம் கேஸ்கள்.. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா!

    ஆனால் அரசு

    ஆனால் அரசு

    ஆனால் தமிழக அரசு தொடக்கத்தில் முழு லாக்டவுன் திட்டத்தில் இல்லை. முதலில் சென்னையில் லாக்டவுன் அறிவிக்கப்படாது. அதற்கு வாய்ப்பு இல்லை. சென்னையில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அரசு தெரிவித்தது. ஆனால் மருத்துவ நிபுணர் குழுவில் ஆலோசனையின் முடிவில் சென்னையில் லாக்டவுன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கட்டுப்பாடு எப்படி

    கட்டுப்பாடு எப்படி

    சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழுஊரடங்கு பிறப்பிக்கப்படும். சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

    முக்கிய விஷயம்

    முக்கிய விஷயம்

    இதற்கு முன் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட சமயங்களில் எல்லாம் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவகாசம் கொடுக்கப்படவில்லை. நாளை லாக்டவுன் என்று இன்று மாலைதான் அறிவிக்கப்பட்டது. எப்போதுமே தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி லாக்டவுனுக்கு முன் சரியாக அவகாசம் கொடுக்கப்படவில்லை. மக்கள் லாக்டவுனுக்கு தயார் ஆக எந்த விதமான வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

    சென்னை நிலை

    சென்னை நிலை

    அதிலும் சென்னையில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கடுமையான லாக்டவுன் கொண்டு வரப்பட்டது. இந்த லாக்டவுன் அறிவிப்பு முதல்நாள்தான் வந்தது. இதனால் மக்கள் கடைகளில் கூட்டம் கூட்டமாக சென்று பொருட்களை வாங்கும் நிலைமை ஏற்பட்டது. அச்சத்தின் காரணமாக மக்கள் பேனிக் பையிங் செய்ய தொடங்கினார்கள். இது பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது.

    அதிகம் ஆன கேஸ்கள்

    அதிகம் ஆன கேஸ்கள்

    இந்த பேனிக் பையிங் காரணமாக ராயபுரம் போன்ற பகுதிகளில் கேஸ்களும் அதிகம் ஆனது. இந்த நிலையில்தான் இந்த முறை மக்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. லாக்டவுனுக்கு மக்கள் தயார் ஆகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வைக்கவும் 4 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் உடனே கொண்டு வரப்படவில்லை. 4 நாட்கள் கழித்து 19ம் தேதிதான் இந்த லாக்டவுன் அமலுக்கு வருகிறது.

    செம அறிவிப்பு

    செம அறிவிப்பு

    இதனால் மக்கள் உடனே அவசரமாக வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. லாக்டவுன் தேதியை பொறுத்து தங்கள் திட்டங்களை அவர்கள் வகுக்க முடியும். அதேபோல் மக்கள் லாக்டவுனை நினைத்து பதற்றம் அடைய வேண்டியது இல்லை. அத்தியாவசிய பொருட்கள் எப்போதும் போல கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு. மக்களின் சிரமங்களை மனதில் வைத்து அரசு சிறப்பாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

    English summary
    Tamilnadu CM planned perfectly for Chennai's extended Lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X