சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு- முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்பது தொடர்பான அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று வழங்கப்பட்டது.

நீட் தேர்வால் தமிழகத்தில் கிராமப்புற, ஏழை எளிய வீட்டு பிள்ளைகளின் மருத்துவ படிப்பு கனவு சிதைந்து போனது. இதனால் மாணவி அனிதா உள்ளிட்ட பலர் தற்கொலை செய்து மாண்டு போயினர்.

TN Commission submits report on special reservation for Govt School Students in Medical Admissions

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக 2 தீர்மானங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால் தமிழக சட்டசபை தீர்மானத்தை பற்றி மத்திய அரசு கவலைப்படவே இல்லை. பின்னர் தமிழக சட்டசபை தீர்மானத்தை நிராகரித்துவிட்டதாக கூறியது மத்திய அரசு.

13 வயது கன்னி சிறுமிகளை கொண்ட இன்ப படை.. தாத்தா முதல் கிம் வரை ஆடிய காமக் களியாட்டம்!13 வயது கன்னி சிறுமிகளை கொண்ட இன்ப படை.. தாத்தா முதல் கிம் வரை ஆடிய காமக் களியாட்டம்!

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பரிந்துரைக்க நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழு பலமுறை கூடி ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நீதிபதி கலையரசன் குழு தமது அறிக்கையை தாக்கல் செய்தது.

English summary
TN Commission today submitted its report on special reservation for Govt School Students in Medical Admissions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X