சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

EXCLUSIVE: "பயந்து பயந்தா நீட்தேர்வு எழுதுவாங்க.. அப்பறம் ரிஜக்ட் பண்றதுக்கா?: கம்யூனிஸ்ட்கள் கேள்வி

நீட் தேர்வு ரத்து செய்ய கம்யூனிஸ்ட்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: "இப்பவே நீட் தேர்வு எழுத வேண்டிய அவசியம் என்ன? யார் கேட்டாங்க? இதனால் பிள்ளைகள் பாதிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? இந்த தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்? யார் முதல்வர் என்ற விவகாரத்தை எல்லாம் பின்னாடி பார்த்துக்கலாம்.. நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு இன்னும் அழுத்தம் தர வேண்டும்" என கம்யூனிஸ்ட் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்ட்டுள்ளது... எனவே, கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார்.

 TN Communist senior leaders urging to cancel neet exam

இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.. தமிழகத்தின் மிக சிறந்த பேச்சாளர்களில் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தா.பாண்டியன் "ஒன் இந்தியா தமிழ்" வாசகர்களுக்கு அளித்த பேட்டியில் சொன்னதாவது:

விமான பயணம் முழுமையாக இல்லை.. தனியார், பேருந்துகளும் இல்லை.. சுருங்க சொன்னால், உற்பத்தி அமைப்புகள் என்னென்ன இருக்கிறதோ அத்தனையையும் மூட வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது.. விவசாயத்தை தவிர.

இதற்கு காரணம், விவசாயத்துக்கு எந்தவித பாதிப்பும் வராது.. நம் நாட்டில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்தான் அதிகம்.. அந்த நிலத்தையும் குடும்பம் குடும்பமாக அவர்களே விவசாயம் செய்து கொள்வதால், அங்கு தொற்று பரவ வாய்ப்பு இல்லை.

ஆனால், இந்தியாவில் கல்வி நகரங்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன.. தொற்று பாதிப்பு இன்னும் குறையவில்லை.. அப்படி இருக்கும்போது, நீட் தேர்வு எழுதுவதற்கான அவசியம் இப்போது என்ன வந்தது? இப்போ நடத்த சொல்லி யார் கேட்டது? பிள்ளைகளின் நலன் முக்கியம்.. ஏற்கனவே நாட்டில் நிலவிய கொள்ளை நோய்கள் போய்விட்டதா? காசநோய் போட்டதா? எந்தவிதத்திலும் தொற்று சம்பந்தமான தீர்வு ஏற்படவில்லை.. அதனால் பிள்ளைகளை தேவையில்லாமல் அலைக்கழிப்பதை தவிர்க்க வேண்டும்.

மாணவர்கள் நமது நாட்டின் எதிர்காலம் - நீட் தேர்வுக்கு ஆதரவாக கடிதம் எழுதிய கல்வியாளர்கள்மாணவர்கள் நமது நாட்டின் எதிர்காலம் - நீட் தேர்வுக்கு ஆதரவாக கடிதம் எழுதிய கல்வியாளர்கள்

தமிழக அரசும் இதற்கு வலியுறுத்த வேண்டும்.. தேர்தல் நடந்து முடிந்து அதற்கு பிறகு நடத்த வேண்டிய விவாதத்தை இப்போதே அதிமுக நடத்தி கொண்டிருப்பது சரியில்லை.. அதற்கு அவசியமும் வரவில்லை.. யார் முதல்வர் என்பதை பின்னாடி பார்த்து கொள்ளலாம்.. மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை தமிழக அரசு தந்து, இந்த நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து சிபிஎம் கட்சியின் பாலகிருஷ்ணன் சொல்லும்போது:

"தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் இருக்கிற நீட்தேர்வுக்கு விலக்கு கேட்டு நாம 2 மசோதாக்கள் சட்டமாக்கிய மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கோம்.. மத்திய அரசு அதற்கு ஒப்புதலும் தரவில்லை.. இந்த காரணத்தினால் என்று எதையும் சொல்லாமல் திருப்பியும் அனுப்பாமல், அங்கேயே போட்டு வெச்சிருக்காங்க.

ஏன்னா, திருப்பி அனுப்பினால், அதுக்கு காரணம் சொல்லணும்.. அந்த காரணத்தை நாம சரி பண்ணி அனுப்பினா அதுக்கு ஒப்புதல் தரணும்.. ஆகவே கிடப்பில் போட்டு வெச்சிருக்காங்க.. ஏற்கனவே கோர்ட்டிலும் இது சம்பந்தமான வழக்குகள் இருக்கு.. இப்போ கொரோனா காலத்தில் அனைத்து தேர்வுகளையும் அகில இந்திய அளவில் ரத்து செய்து, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் திறப்பதையும் ஒத்திவைத்துள்ளனர்.

இந்த சமயத்தில் செப்டம்பர் மாசம் நீட்தேர்வையும், பொறியியல் கல்லூரிக்கான தேர்வையும் நடத்துறது எப்படி சாத்தியம்? மத்திய அரசு பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் உயிருடன் விளையாடுகிறது.. நேத்துகூட நாங்க தமிழ்நாடு பூராவும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கோம்.. மத்திய அரசின் முடிவுகள் மாணவர்களை ஆபத்திற்கு தள்ளும்.

Recommended Video

    NEET, JEE தேர்வுகளுக்கு எதிராக ஒன்றிணையும் முதல்வர்கள்.. உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு

    அச்சம் கலந்தா மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள்? அவங்க சரியா தேர்வு எழுதல.. மார்க் எடுக்கல-ன்னு நாளைக்கு சொல்லி நிராகரிப்பதற்கு இது ஒரு வாய்ப்பாகவும் போய்டும்.. எனவே மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தப்பு.. இதை ரத்து செய்யணும்' என்றார்.

    English summary
    TN Communist senior leaders urging to cancel neet exam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X