சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'முதல்ல கீழே இறங்கு'.. மீனவ பெண்ணை அரசு பேருந்தில் இருந்து இறக்கி விட்ட கண்டக்டர்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: அரசு பேருந்தில் இருந்த மீனவப் பெண்ணை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிய கண்டக்டருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் மகாபலிபுரம் பேரூராட்சி கொகிலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர செல்லம்மாள்( 52) . இவர் இன்று காலை மீன் வியாபாரத்திற்காக மீன் கூடையை எடுத்துக்கொண்டு மாமல்லபுரம் பேருந்து நிலையத்துக்கு சென்றார்.

Recommended Video

    முதல்ல கீழே இறங்கு.. மீனவ பெண்ணை அரசு பேருந்தில் இருந்து இறக்கி விட்ட கண்டக்டர்.. என்ன நடந்தது?

    4 நாளுக்கு முன்பு அரசு பேருந்து.. இன்னிக்கு 108 ஆம்புலன்ஸ்.. பூம்புகார் எம்எல்ஏவின் அசத்தலான காரியம்4 நாளுக்கு முன்பு அரசு பேருந்து.. இன்னிக்கு 108 ஆம்புலன்ஸ்.. பூம்புகார் எம்எல்ஏவின் அசத்தலான காரியம்

    அங்கு இருந்து தாம்பரம் வரை செல்லக்கூடிய பேருந்தில் (தடம் எண் 515) பேருந்தில் செல்லம்மாள் ஏறினார். அந்த பேருந்தின் கண்டக்டர் இதனை பார்த்து ஆத்திரம் அடைந்தார். ''மீன் கூடையை ஏற்றிக்கொண்டு பேருந்தில் ஏறக்கூடாது. உடனே கீழே இறங்கு'' என்று மீனவ பெண்ணிடம் கூறினார்

    பேருந்தில் இருந்து இறக்கி விட்டார்

    பேருந்தில் இருந்து இறக்கி விட்டார்

    அதற்கு செல்லம்மாள் ''நான் ஏன் இறங்க வேண்டும் என்று கேட்க'' இதற்கு ''நீ யாரிடமும் போய் வேண்டுமானலும் புகார் கொடு'' என்று கூறிய கண்டக்டர் மீனவ பெண்மணியை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி விட்டார். மீனவ பெண் செல்லம்மாள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்படும் காட்சிகளும், கண்டக்டர் பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    நாங்கள் திருடர்களா?

    நாங்கள் திருடர்களா?

    பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட மீனவ பெண் மிகவும் வேதனை அடைந்தார். நாங்கள் என்ன திருடர்களா? நாங்கள் பயணச் சீட்டுக்கு பணம் செலுத்த மாட்டோமா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
    மாநகரப் பேருந்து ஏழைகளுக்கானது இல்லையா? வசதிபடைத்தவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள்லக்கேஜ் ஏற்றுவது இல்லையா? நாங்கள் பணம் செலுத்தத் தயாராக இருக்கும்போது நடத்துனர்கள் ஏன் எங்களை கீழ்தரமாக பார்க்கின்றனர்?

    பலரும் கண்டனம்

    பலரும் கண்டனம்

    மாநகர பேருந்தில் மீன் கூடைகளை ஏற்றக் கூடாது என்று அரசு விதி ஏதும் உள்ளதா? என்றும் மீனவ பெண் செல்லம்மாள் தனது மனக்குமுறலை கொட்டினார். ''இது என்ன கொடுமை? என்று நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    தொடர் சம்பவங்கள்

    தொடர் சம்பவங்கள்

    இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது துறை ரீதியான ஒழுங்கீன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பேருந்துகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதனை முழுமையாக தடுக்கும் வகையில் அரசு பேருந்து டிரைவர் மற்றும் கண்டர்களுக்கு அறிவுரை வழங்கி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் கூறியிள்ளனர்.

    English summary
    Many condemned the conductor who forcibly lowered a fisherwoman on a government bus. Public and social activists have demanded that the department take disciplinary action against the conductor involved
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X