சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருநாவுக்கரசு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.. தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Congress Candidates List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படுகிறது. கட்சிகள் தேர்தல் பிரசாரத்தையும் வெற்றிக்கான வியூகத்தையும் எப்போதோ தொடங்கிவிட்டன. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் இருந்து முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்ய வரவுள்ளனர்.

    மேலும் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.

    "இந்த" இரு தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக நேரடியாக மல்லுக்கட்டு!.. போட்டி பலமா இருக்கும் போலயே

     வேட்பாளர் பட்டியல்

    வேட்பாளர் பட்டியல்

    இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிதான் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பாஜக நேற்று முன் தினம் இரவு அறிவித்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி நேற்று நள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

     காங்கிரஸ் போட்டி

    காங்கிரஸ் போட்டி

    தமிழகத்தில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் புதுவையில் ஒரு தொகுதியிலும் அக்கட்சி போட்டியிடுகிறது. இதில் சிவகங்கையை தவிர்த்து மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. திமுக, விசி, மதிமுக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.

    இவர்கள்தான் வேட்பாளர்கள்

    இவர்கள்தான் வேட்பாளர்கள்

    வேட்பாளர் பட்டியல் விவரம்:

    • திருவள்ளூர் தொகுதி- ஜெயக்குமார்
    • கிருஷ்ணகிரி- செல்லகுமார்
    • ஆரணி- விஷ்ணுபிரசாத்
    • கரூர்- ஜோதிமணி
    • திருச்சி- எஸ் திருநாவுக்கரசு
    • விருதுநகர்- மாணிக்கம் தாகூர்
    • கன்னியாகுமரி - எச்.வசந்தகுமார்
    • தேனி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
    • சிவகங்கை- இன்னும் அறிவிக்கப்படவில்லை
    • புதுவை - வைத்தியலிங்கம்
     வைத்திலிங்கம் வேட்புமனு

    வைத்திலிங்கம் வேட்புமனு

    காங்கிரஸ் தலைமை வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுத்தியது. இதனால் புதுவை பொங்கி எழுந்தது. அதன்படி புதுவையை பொருத்தமட்டில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டியிடுவார் என அந்த யூனியன் பிரதேச காங்கிரஸ் கட்சியே அறிவித்தது. மேலும் அவர் நேற்றைய தினம் வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.

    English summary
    Tamilnadu Congress Committee releases the candidate list of those who are in fray in Loksabha elections .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X