சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்களா கிருஷ்ணர்- அர்ஜூனர்: ரஜினிக்கு தமிழக காங். கண்டனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajini Praises Amit shah | காஷ்மீரை இரண்டாக பிரித்த அமித்ஷா..ரஜினிகாந்த் அதிரடி பாராட்டு!

    சென்னை: பல கோடி மக்களின் உரிமைகளைப் பறித்தவர்களா கிருஷ்ணரும் அர்ஜூனரும் என்று ரஜினிகாந்துக்கு தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அர்ஜூனர்- கிருஷ்ணர் என ஒப்பிட்டுப் பேசினார். இது கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கியது.

    TN Congress condemns Rajinikanth

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது ரஜினிகாந்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜூனருமாக இருக்க முடியும். அன்புள்ள @rajinikanth அவர்களே, தயவு செய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள். திரும்பவும் சரியாகப் படியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதை ரீ ட்வீட் செய்துள்ள லோக்சபா எம்.பி கார்த்தி சிதம்பரம், ரஜினிகாந்த் வரலாற்றை கட்டாயம் படிக்க வேண்டும். அதுவும் 1930 முத 1945-ம் ஆண்டு காலத்திய ஜெர்மன் வரலாற்றை படிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Tamilnadu Congress Committee has condemned Rajinikanth on his comparison of Krishna-Arjuna.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X