சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாவம் செய்து விட்டார் டாக்டர் ராமதாஸ்.. அதிலிருந்து அவரால் விடுபடவே முடியாது.. கே.எஸ்.அழகிரி சாபம்

8 வழிச்சாலைக்கு எதற்காக ஆதரவு தருகிறோம் என்று அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் எழுந்தது எட்டுவழி சாலை சர்ச்சை... ராமதாஸ், அழகிரி இடையே வார்த்தை போர்- வீடியோ

    சென்னை: "பாவத்தை செய்த கட்சிகளோடு கூட்டணி வைத்த மகா பாவத்தை பாமக செய்திருக்கிறது. அதிலிருந்து ராமதாஸ் விடுபடவே முடியாது" என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு அழகிரி ஒரு பேட்டி அளித்திருந்தார். அதாவது மத்திய அரசு கொண்டு வரும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்திருந்தார். அழகிரியின் இந்த பேச்சு அனைத்து தரப்பினருக்குமே கடும் அதிர்ச்சியை தந்தது.

    இது சம்பந்தமாக டாக்டர் ராமதாசும் தனது ட்விட்டர் பதிவில், "தேர்தல் வரை 'பரி'களாக இருந்தவர்கள் தேர்தலுக்குப் பின் வேடம் கலைந்து நரிகளாக மாறியிருக்கின்றனர். வாழ்க வேடதாரிகள்!" என்றும், இதற்கு முக ஸ்டாலின் முகத்தை எங்கே திருப்பி வைத்து கொள்வார் என்றும் பதிவிட்டார்.

    பத்து போதும்.. எட்டு தேறாது.. தினகரன் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் அவர்கள்! பத்து போதும்.. எட்டு தேறாது.. தினகரன் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் அவர்கள்!

    அரசாணை

    அரசாணை

    இந்நிலையில், தான் எதற்காக 8 வழிச்சாலைக்கு ஆதரவு தருகிறோம் என்பதை அழகிரி நேற்று விளக்கமாக கூறியதுடன், இது சம்பந்தமாக ஒரு அறிக்கையும் வெளியிட்டார். அதில், "சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி, திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    நெடுஞ்சாலைகள்

    நெடுஞ்சாலைகள்

    இதுகுறித்து திருவண்ணாமலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நான் கூறிய கருத்துக்கள் ராமதாசுக்கு சரியாக சென்றடையவில்லை. சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு சாலைகள் போடுவதை தடை செய்யவில்லை. சேலம் - சென்னை பசுமை வழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள எவ்வித நிபந்தனைகளையும் தமிழக அரசு பின்பற்றவில்லை என்பதே நீதிமன்ற தீர்ப்பு.

    பசுமை வழிச்சாலை

    பசுமை வழிச்சாலை

    2017ம் ஆண்டு மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட பாரத் மாலா பரியோஜனா திட்டத்தில் சென்னை - மதுரை நெடுஞ்சாலை திட்டம்தான் சேர்க்கப்பட்டதே தவிர, சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் சேர்க்கப்படவில்லை.

    அரசியல் ஆதாயம்

    அரசியல் ஆதாயம்

    ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் கொண்டுவரப்பட இருந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை ஒரு தனி மனிதரின் ஆதாயத்திற்காகவே தமிழக அரசு மிகுந்த அக்கறை காட்டியது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எந்த திட்டத்தையும் பாமகவை போல, அரசியல் ஆதாயத்திற்காக கண்மூடித்தனமாக எதிர்க்கிற கட்சி அல்ல.

    மகா பாவம்

    மகா பாவம்

    ஆனால் அதற்கு மாறாக திட்டத்தை மக்கள் மீது திணிக்க முற்பட்ட பாவத்தை பாஜவும், அதிமுகவும் இணைந்து செய்ததை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். இத்தகைய பாவத்தைச் செய்த கட்சிகளோடு கூட்டணி வைத்த மகாபாவத்தை பாமக செய்திருக்கிறது. அதிலிருந்து ராமதாஸ் விடுபட முடியாது.

    சுயமரியாதை

    சுயமரியாதை

    ராமதாஸ் தன்னுடைய டிவிட்டரில், என்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்திற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைகுனிய வேண்டுமென்று கூறியிருக்கிறார். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் வழியில் வந்தவர் மு.க.ஸ்டாலின். அவர் ஒருபோதும் தலைகுனிய வேண்டிய அவசியம் வராது" என்று விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    TN Congress Leader KS Azhagiri Explains why we are against Chennai Salem 8 way road project
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X