சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

C Voter: தமிழக பொருளாதாரத்தை உயர்த்த ஐடியா இருக்குணு சொன்ன கமல் கட்சிக்கு ஒற்றை இலக்க வெற்றியா?

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டடசபை தேர்தலில் வெறும் 4 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுகவை புறந்தள்ளிவிட்டு மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பதே அக்கட்சியினரின் தேர்தல் பிரச்சாரமாக இருந்து வருகிறது.

கமல் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அந்த ஊர்களில் முடிக்கப்படாத முக்கிய திட்ட பணிகளை கையில் எடுப்பார். அந்த திட்டத்தின் நன்மைகளை கூறி இதை இன்னமும் முடிக்காமல் உள்ளனரே என சுட்டிக் காட்டுவார்.

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பேரிடி.. சி வோட்டர் கருத்து கணிப்பு!சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பேரிடி.. சி வோட்டர் கருத்து கணிப்பு!

நெருக்கம்

நெருக்கம்

எம்ஜிஆரின் ஆட்சியை தன்னால் கொடுக்க முடியும் என கூறி வந்த நிலையில் அவரது பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என அதிமுகவினர் கண்டனம் தெரிவித்தனர். எனினும் எம்ஜிஆர் ஒன்றும் அதிமுகவினருக்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல என கூறிய கமல்ஹாசன், எம்ஜிஆருடன் தனக்கு இருக்கும் நெருக்கம் எத்தகையது என்பது குறித்து நேற்றைய தினம் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

கருத்து கணிப்பு

கருத்து கணிப்பு

இந்த தேர்தலில் கமல்ஹாசனும் போட்டியிடுவதாக அறிவித்துளளார். மூத்த தலைமுறையினர் செய்த தவறை இளைய தலைமுறையினர் மாற்ற வேண்டும் என பிரச்சாரங்களில் முழங்கினார். இந்த நிலையில் ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பில் திமுகவே வெற்றி பெறும் என கணித்துள்ளது.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 166 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் அதிமுக கூட்டணி 60 முதல் 68 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி 1 முதல் 4 இடங்களில் வெற்றி பெறும் இல்லாவிட்டால் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாத நிலையும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்கள்

சமூகவலைதளங்கள்

சமூகவலைதளங்களையும் ,பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நல்ல ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார் கமல்ஹாசன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிம்பாலிக்காக அரசை சாடுவார். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரத்தை பல மடங்கு உயர்த்துவதற்கான திட்டங்களை வைத்துள்ளதாகவும் இல்லத்தரசிகளுக்கு மாதம் கணிசமான ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பொருளாதாரக் கொள்கை, தொழில் கொள்கை என வாராவாரம் 7 கொள்கைகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

English summary
TN Election 2021 Opinion Polls ABP C Voter: MNM will win upto 4 seats or no seat. மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டடசபை தேர்தலில் வெறும் 4 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X