உடைந்து அழும் திமுகவினர்.. 100ஐ தாண்டிய தவெக. சற்றும் எதிர்பார்க்காத முடிவால் ஏமாற்றம்
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றிலேயே சற்றும் எதிர்பாராத ஒரு 'சுனாமி' போன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிது. அசைக்க முடியாத கோட்டை என்று கருதப்பட்ட திமுக-வின் கோட்டைகளான சென்னை, திருச்சி, வட மாவட்டங்கள் என ஒவ்வொன்றாகத் தகர்ந்து வருகிறது, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்த உடன்பிறப்புகள் கண்ணீர் விட்டு அழும் உருக்கமான வீடியோ வெளியாகி உள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவுகள் திமுக-வுக்குப் பாதகமாக வரத் தொடங்கின. காலை 11 மணி நிலவரப்படி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழக 100 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை பெற்று அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது.அதிமுக 75 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்து தவெக-வுக்குப் போட்டியாகத் திகழ்கிறது.
திமுக எதிர்பாராத விதமாக 57 தொகுதிகளுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

வெற்றிச் செய்திகளைக் கேட்க ஆவலோடு அண்ணா அறிவாலயத்தில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள், முன்னிலை நிலவரங்களைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கட்சியின் டாப் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருவதால், பல உடன்பிறப்புகள் கண்ணீர்மல்க ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்கள்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் திமுக-வுக்கே சாதகமாக இருந்த நிலையில், இன்றைய நிலவரம் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. "மக்களுக்காக இவ்வளவு திட்டங்களைச் செய்தும், இப்படி ஒரு தோல்வியைச் சந்திக்கிறோமே" என மூத்த நிர்வாகிகள் கண்ணீர் மல்கக் கருத்துத் தெரிவித்தனர். ஒரு நிர்வாகி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தலைவர் ஸ்டாலின் கடுமையாக உழைத்தார். மகளிருக்கு திமுக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தது.அண்ணா அறிவாலயத்தில் கொட்டரை பிரிப்பதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..ஒரு பங்சன் நேற்று நடந்தது.இன்று கொட்டகையை பிரிக்கிறார்கள். 12 மணி அல்லது ஒரு மணிக்கு மேல் பாருங்கள். திமுக கண்டிப்பாக மீண்டும் முன்னிலை வகிக்கும் என்றார்.
#WATCH | Tamil Nadu Assembly Elections | A DMK worker breaks down as the party is at a distant third position, as per the early trends.
— ANI (@ANI) May 4, 2026
TVK is leading on 50, AIADMK on 47 and DMK on 23 seats, as per early trends. pic.twitter.com/LRfWXh4og4
இதனிடையே விஜய்யின் தவெக ஏற்படுத்தியுள்ள இந்த 'அரசியல் சுனாமி', திமுக-வின் பாரம்பரிய வாக்கு வங்கியை முற்றிலுமாகச் சிதைத்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறினார்கள்.
மற்றொரு புறம், அதிமுக இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், திமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது அக்கட்சித் தொண்டர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
1977-ல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய மாற்றத்தை விடவும் பெரிய மாற்றத்தை இன்று விஜய் ஏற்படுத்தியுள்ளார். 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, தவெக 100 இடங்களைத் தாண்டி முன்னேறுவது ஒரு புதிய அரசியல் யுகத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications