சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொறியியல் படிப்பு கவுன்சலிங்.. மாணவர்கள் எளிதாக பங்கேற்கே, 42 உதவி மையங்கள்.. முழு விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: பொறியியல் படிப்பு கவுன்சலிங்கில் மாணவர்கள் பங்கேற்பதற்காக மாவட்ட வாரியாக 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை நடத்துகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மே 2ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளுக்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதியும், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 3 முதல் 28-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் ஜூன் 17ம் தேதி வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தல், விருப்ப கல்லூரியை தேர்வு செய்வதல், சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவற்றுக்காக தமிழகம் முழுவதும் 42 பொறியியல் கலந்தாய்வு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள் முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்

திருவள்ளூர்

திருவள்ளூர்

அவற்றின் விவரங்கள் பின்வருமாறு : சென்னை: தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி. கடலூர்: திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி விருதாச்சலம் மற்றும் போக்கல்டி ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். காஞ்சிபுரம்: பச்சையப்பாஸ் பெண்கள் கல்லூரி மற்றும் ஐஆர்டி பாலிடெக்னிக் கல்லூரி குரோம்பேட்டை. திருவள்ளூர்: முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆவடி.

ஈரோடு

ஈரோடு

கோயம்புத்தூர்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி பீளமேடு, அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி புதுசித்தாபுதூர் மற்றும் கோயம்புத்தூர் இன்டிட்யூட் ஆப் டெக்னாலஜி. ஈரோடு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பெருந்துறை ஆகிய இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்: என்கேஆர் அரசு பெண்கள் கலைக்கல்லூரி.நீலகிரி: ஊட்டி அரசுக் கலைக்கல்லூரி.சேலம்: கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி. திருப்பூர்: சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி. கரூர்: தான்தோனிமலையில் உள்ள அரசுக் கலைக்கல்லூரி.

திண்டுக்கல்

திண்டுக்கல்

மதுரை: திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி. ராமநாதபுரம்: இளையான்குடி அருகே உள்ள அரசு அரசுக் கலைக்கல்லூரி, தேனி: போடிநாயக்கனூரில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி.திண்டுக்கல்: கரூர் ரோட்டில் அமைந்துள்ள ஜிடிஎன் கலைக்கல்லூரி. அரியலூர்: கீளப்பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி. நாகப்பட்டினம்: பால்பண்ணைசேரியில் அமைந்துள்ள வாலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி.பெரம்பலூர்: கிழக்கனவாயில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி.

திருச்சி

திருச்சி

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் துவாக்குடிமலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி.புதுக்கோட்டை: அறந்தாங்கியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி. தஞ்சாவூர்: ரெகுநாதபுரத்தில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செங்கிபெட்டியில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி. திருவாரூர்: வலங்கைமானில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி. சிவகங்கை: காரைக்குடியில் உள்ள ஏசி அரசு இன்ஜினியரிங் கல்லூரி.

தூத்துக்குடி

தூத்துக்குடி

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள சவுத் திருவாங்கூர் இந்து கல்லூரி, திருநெல்வேலி: அரசு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி. தூத்துக்குடி: அரசு பாலிடெக்னிக் கல்லூரி, விருதுநகரில் வி.வி.வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை: அரசு பாலிடெக்னிக் கல்லூரி செய்யாறு. வேலூர்: தந்தை பெரியார் அரசு தொழில் நுட்பக் கழகம், பாகாயம். விழுப்புரம்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி. தர்மபுரி: செட்டிகரையில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி, கிருஷ்ணகிரி: பர்கூரில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி.

English summary
TN Engineering Study counseling, list out of 42 aid centers in tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X