சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கதியும் திரும்பி இருந்தால் அதோ கதிதான்.. ஒரே நேரத்தில் ட்வின் புயல்.. ஒன்றிலிருந்து தப்பித்த தமிழகம்

Google Oneindia Tamil News

சென்னை: சோமாலியாவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் கதி புயல் ஒருவேளை தமிழகம் நோக்கி திரும்பி இருந்தால்.. இரண்டு புயல்களை அடுத்தடுத்து சந்திக்க வேண்டிய நிலைக்கு தமிழகம் உள்ளாகி இருக்கும்.

Recommended Video

    Cyclone Nivar: இந்திய பெருங்கடலில் வானிலை அதிசயம்! | Oneindia Tamil

    இந்திய கடற்பரப்பில் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகி உள்ளது. ஒன்று கதி புயல்.. இந்த புயல் அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டு உள்ளது.

    இன்னொன்று நிவர் புயல்.. இந்த புயல் தற்போது வங்ககடலில் உருவாகி வருகிறது. இன்னும் 24 மணி நேரத்தில் இந்த புயல் முழுமையாக உருவாகிவிடும். இந்த புயல் மாமலப்புரம் - காரைக்கால் அருகே கரையை கடக்கிறது.

    எப்படி

    எப்படி

    இதில் கதி புயல் தற்போது தீவிர புயலாக உள்ளது. இன்று இரவு இந்த புயல் அதி தீவிர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கதி புயல் தீவிரமாக உருவெடுத்து வேகமாக நகர தொடங்கியது. இந்த புயல் கரையை கடக்கும் போது 120 கிமீ வேகம் வரை செல்ல வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் கதி புயல் தமிழகத்தில் கரையை கடக்காது. தமிழகம் பக்கமே இந்த புயல் வரவில்லை. மேற்கு நோக்கி திரும்பி கதி புயல் சோமாலியா நோக்கி சென்று.. அங்கேயே கரையை கடக்கிறது. இதனால் இந்த புயல் காரணமாக தென்னிந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் எந்த பாதிப்பும் இல்லை.

    பாதிப்பு இல்லை

    பாதிப்பு இல்லை

    ஆனால் ஒருவேளை இந்த கதி புயல் மட்டும் மேற்கு நோக்கி செல்லாமல் கிழக்கு நோக்கி திரும்பி இருந்தால் தமிழகம் மற்றும் கேரளாவை நோக்கி வந்து இருக்கும். மும்பை, கேரளா, குமரி என்று ஏதாவது ஒரு இடத்தில் கரையை கடந்து இருக்கும். அப்படி மட்டும் நடந்து இருந்தால் தமிழகம் அடுத்தடுத்து பெரும் மழையை பார்த்து இருக்கும்.

    இரண்டு புயல்

    இரண்டு புயல்

    முதலில் கதி புயல் தாக்கி இருக்கும், அதன்பின் நிவர் புயல் தாக்கி இருக்கும். அல்லது கதி புயல் விட்டு செல்லும் மழையாவது தமிழகத்திற்கு வந்திருக்கும். ஆனால் இந்திய கடற்பரப்பில் காற்று வீசும் திசை, அழுத்த மாற்றம் காரணமாக.. கதி புயல் தமிழகம் பக்கம் தலை வைக்காமல் அப்படியே சோமாலியாவிற்கு சென்றுவிட்டது.

    தப்பித்தது

    தப்பித்தது

    இதனால் இரண்டு புயலை எதிர்கொள்ளாமல் தமிழகம் ஒரு புயலை மட்டுமே எதிர்கொள்ள போகிறது. கதியில் இருந்து தப்பித்தாலும் நிவரின் ஆபத்து இன்னும் இருக்கிறது. இந்த நிவர் புயலும் கரையை கடக்கும் போது 115-117 கிமீ வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலும் அதிதீவிர புயலாக மாறிதான் கரையை கடக்க போகிறது. அதனால் இந்த புயலும் தமிழகத்திற்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu escaped from Gati, Nivar storm is still a major threat to the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X