சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் செம அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மூழ்கிய விவசாயிகள்.. முதல்வரை புகழ்ந்து.. உற்சாக கொண்டாட்டம்!

Google Oneindia Tamil News

சேலம்: சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை சேலத்தில் பட்டாசுகள் வெடித்து விவசாயிகள் கொண்டாடினர்.

Recommended Video

    சட்டப்பேரவை நிகழ்வுகள் 24-06-2021

    சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

     ஸ்டாலினின் ஆவேச சட்டசபை பேச்சு.. வானதி சீனிவாசனுக்கு வந்த குபீர் சந்தேகம்! ஸ்டாலினின் ஆவேச சட்டசபை பேச்சு.. வானதி சீனிவாசனுக்கு வந்த குபீர் சந்தேகம்!

    விவசாயிகள் போராட்டம்

    விவசாயிகள் போராட்டம்

    இந்த திட்டம் கொண்டு வந்தால் இந்த பகுதிகளில் உள்ள வனங்கள், விவசாய நிலங்கள் அழிக்கப்படும் என்று விவசாயிகள், அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினார்கள். இதனால் இந்த திட்டத்தை கண்டித்து சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டத்தைச் சேர்ந்த இத்திட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    300-க்கும் மேற்பட்ட வழக்குகள்

    300-க்கும் மேற்பட்ட வழக்குகள்

    இதனால் ஐந்து மாவட்டங்களிலும் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எட்டு வழி சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    தற்போது தி.மு.க ஆட்சி நடந்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது தவிர மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடியவர்களின் வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

    பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    சட்டசபையில் முதல்வர் இதனை வரவேற்றபோது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த நிலையில் இந்த அறிவிப்பை வரவேற்று சேலம் அருகே குப்பனூர் பகுதியில் விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். முதல்வர் ஸ்டாலினை வெகுவாக பாராட்டினார்கள். விரைவில் முதல்வர் ஸ்டாலின் சென்னை- சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை முழுமையாக ரத்து செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    farmers explode firecrackers in Salem to celebrate Chief Minister MK Stalin's announcement that the cases against those who opposed the Chennai-Saleem 8-lane project will be withdrawn
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X