இன்னசென்ட் திவ்யாவுக்கு "இந்த" போஸ்டிங்கா.. பறந்து வந்த ஆர்டர்.. 3 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்
சென்னை: நீலகிரி மாவட்ட கலெக்டராக பதவி வகித்த இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது... அத்துடன் தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீப நாட்களாகவே, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
நேற்று முன் தினம்தான் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான டிரான்ஸ்பர் உத்தரவு அறிவிப்பு வந்தது.. இப்போது 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற அறிவிப்பு வந்துள்ளது.

இயக்குனர்கள்
அதன்படி, நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்... ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்... பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சுப்பையன் ஆவின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிரான்ஸ்பர்
இதில் இன்னசென்ட் திவ்யாவுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு, பரவலாக அனைவரும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.. கடந்த 2019-ல் இன்னசென்ட் திவ்யாவை டிரான்ஸ்பர் செய்வதற்கான பணிகள் நடந்து வந்ததாகவே தெரிகிறது.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஒரு வழக்கு தொடர்ந்தார்.. அந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியில்லாமல் திவ்யாவை இடமாற்றம் செய்யக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அவசியம்
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, திடீரென இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்வது அவசியமாகிறது என்று தமிழக அரசு கூறியிருந்தது.. அத்துடன், நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்வதற்கு இந்த இடமாற்றம் அவசியம் என்றும் விளக்கம் கூறியிருந்தது.. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட், கடந்த 16ம் தேதி இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கியது.

கலெக்டர்
இதற்கு பிறகு, புதிய கலெக்டராக அறிவிக்கப்பட்டாரே தவிர, திவ்யாவுக்கு எங்கு இடமாற்றம் என்பதற்கான அறிவிப்பு வராமலேயே இருந்தது.. இதனிடையே புதிய கலெக்டராக அம்ரீத் பதவிஏற்றுக் கொண்டார்.. எனினும், இன்னசென்ட் திவ்யாவிற்கு பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாமல் இருந்த நிலையில், இப்போது அவர் திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்...

நீலகிரி
நீலகிரியில் மாவட்ட மக்களின் நன்மதிப்பை நேரடியாகவும், அபரிமிதமாகவும் பெற்றுள்ள இன்னசென்ட் திவ்யா, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக செயல்பட்டவர் என்பதுடன், நீலகிரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை இந்தியா பணியை சிறப்பாக முன்னெடுத்தவர்.. யானை வழித்தடங்களை மீட்பது தொடர்பாக, ஆக்கிரமிப்பு செய்த ரிசார்ட்டுகளை எல்லாம் அப்புறப்படுத்தும் பணியில் சிறப்பாகவும் யாருக்கும் வளைந்து கொடுக்காமலும் செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.