சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுரோட்டில் பேனர்.. பறிபோன சுபஸ்ரீ உயிர்.. பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை!

பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    பறிபோன சுபஸ்ரீ உயிர்.. இன்ஸ்பெக்டர் மீதுகடும் நடவடிக்கை! | Subashree Chennai

    சென்னை: பள்ளிக்கரணை நடுரோட்டில் பேனர் வைத்த விவகாரத்தில்.. இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்து தமிழக அரசு அதிர வைத்துள்ளது.

    பிளக்ஸ் பேனர் பறந்து விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவத்தினால், நீதிமன்றம் கொதித்து போய் உள்ளது. இன்னமும் இது சம்பந்தமாக முக்கிய குற்றவாளி ஜெயகோபாலை கைது செய்யாமல் உள்ளனர். தனிப்படை வைத்து தேடியும் அவரை காணோம் என்று சொல்கிறார்கள் போலீசார். இன்னும் தேடி கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

    TN Gov has taken action on Pallikkaranai Police Inspector

    அன்று பேனர் வைத்ததன் எதிரொலியாக மறுநாளே மாநிலம் முழுவதும் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அதேபோல, அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் தங்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என்று கண்டிப்பு உத்தரவு போடவும், அதற்கு தொண்டர்களும், ரசிகர்களும் கீழ்ப்படிந்து வருகின்றனர்.

    "மாயாவி" ஜெயகோபால்.. அப்படி எங்கேதான் போய் விட்டார்.. கோர்ட் கேட்டதில் ஆயிரம் அர்த்தம் இருக்கு!

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டனத்தை தொடர்ந்து குவித்து வருவதால் தமிழக அரசும் சுதாரிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    போலீஸ் சட்டம், 3 பி என்ற பிரிவின் கீழ் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பிரிவின்படி, பதவி உயர்வு, ஊதிய உயர்வு இப்படி எந்த சலுகையும் இன்ஸ்பெக்டருக்கு கிடைக்காது. உயர்நீதிமன்றத்தின் கோபத்தைத் தணிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    அதேசமயம் தொடர்ந்து ஜெயகோபால் தலைமறைவாகவே இருக்கிறார். இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுத்தது போல ஜெயகோபாலையும் போலீஸார் சீக்கிரமாக உள்ளே தள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    English summary
    Tamilnadu Government has taken action on Pallikkaranai Police Inspector Azhagu under 3B section over Banner issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X