சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்பத்தூர், கிண்டி உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்கலாம்.. தமிழக அரசு அனுமதி

Google Oneindia Tamil News

சென்னை: அம்பத்தூர், கிண்டி உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 50 நாட்களுக்கு பிறகு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

TN government allows 17 industrial estates to function from tomorrow

அதன்படி தொழிற்சாலைகள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அது போல் அம்பத்தூர், கிண்டி உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் அம்பத்தூர், கிண்டி உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

இன்று முதல் தமிழகத்தில் சென்னை தவிர நகர்ப்புறங்களில் சலூன் கடைகள் திறப்புஇன்று முதல் தமிழகத்தில் சென்னை தவிர நகர்ப்புறங்களில் சலூன் கடைகள் திறப்பு

25 சதவீதத் தொழிலாளர்களை மட்டுமே கொண்டு இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. 100 பணியாளர்கள் இருப்பின் ஒரு நாளைக்கு 25 பேர் அடுத்த நாளைக்கு அடுத்த 25 பேர் என சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு வரும் ஊழியர்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தமாக கை கழுவ வேண்டும். தொழிற்சாலைகளில் உள்ள கழிப்பறைகளை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Government allows Ambattur, Guindy including 17 industrial estates to function from tomorrow without violating Anti Corona activities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X