சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் நாளிலேயே பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அரசு நகர பேருந்துகளில்.. நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு நகர பேருந்துகளில் நாளை முதல் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அறுதி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

 நல்ல நேரத்தில் பதவியேற்று ராகுகாலம் முடிந்து முதல் கையெழுத்து போட்ட மு.க. ஸ்டாலின் நல்ல நேரத்தில் பதவியேற்று ராகுகாலம் முடிந்து முதல் கையெழுத்து போட்ட மு.க. ஸ்டாலின்

தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். மேலும் 33 அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

முதல் கையெழுத்து

முதல் கையெழுத்து

முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினின் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்? என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் உலாவி வந்தது.

கொரோனா நிவாரண நிதி

கொரோனா நிவாரண நிதி

இந்த நிலையில் தான் தேர்தல் பிரசாரத்தின்போது கூறிய வாக்குறுதிகளை பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் மக்களின் கட்டணத்தை அரசே ஏற்கும். ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும். இதில் முதல் தவணையாக ரூ.2,000 இம்மாதமே வழங்கப்படும்.பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண ''உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' என்னும் துறை புதிதாக உருவாக்கம்

பெண்களுக்கு இலவச பயணம்

பெண்களுக்கு இலவச பயணம்

மே 16-ம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு . தமிழகத்தில் அனைத்து பெண்களும் நாளை முதல் சாதாராண கட்டண நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று இந்த 5 திட்டங்களுக்கு முதல் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின். இதில் முக்கிய சிறப்பு அம்சமாக உள்ளது அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யலாம் என்பதாகும்.

யார், யார் பயணிக்கலாம்?

யார், யார் பயணிக்கலாம்?

இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக்கு கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணியபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கி ஈடுகட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu government has announced that women will be able to travel on government city buses for free from tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X