சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பஸ்சில் பயணம் செய்ய 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்.. அறிவிக்குமா தமிழக அரசு?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த பேருந்துகளில் பயணிகள் அதிகம் பயணிப்பதை தடுக்க அவர்களுக்கு கிடுக்கிபிடி உத்தரவு போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2019-ஆம் ஆண்டு வந்த கொரோனா இன்னும் நம் உலகத்தை விட்டு போகாமல் இங்கேயே டேரா போட்டு கொண்டிருக்கிறது. அவ்வப்போது உருமாற்றம் அடைந்து புதிய வெர்ஷனிலும் வந்து மிரட்டுகிறது.

ஷாக்! இந்தியாவில் ஒரே வாரத்தில் 40% அதிகரித்த கொரோனா.. அதுவும் இந்த 3 மாநிலங்கள்தான் டாப்! ஷாக்! இந்தியாவில் ஒரே வாரத்தில் 40% அதிகரித்த கொரோனா.. அதுவும் இந்த 3 மாநிலங்கள்தான் டாப்!

அது போல் தமிழகத்தில் கொரோனா 3ஆவது அலை வீசி வருகிறது. இது புதிய வேரியண்ட்டான ஓமிக்ரானால் வீரியமடைந்து வருகிறது. என்னதான் ஓமிக்ரான் வேகமாக பரவி வந்தாலும் உயிரிழப்பு ஏற்படும் நிலை இல்லாதது மக்கள் வயிற்றில் பால் வார்க்கும் செயலாகவே உள்ளது.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை

தற்போது ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் 4 இலக்கத்தில் இருந்த கொரோனா தினசரி கேஸ்கள் தற்போது 5 இலக்கத்திற்கு அதாவது 24 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. பொங்கல் பண்டிகைக்கு சென்ற மக்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பியுள்ளனர். எனவே அடுத்த வாரத்திற்கு கேஸ்கள் இன்னமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்க்

மாஸ்க்

கொரோனா பரவி வரும் நிலையில் மக்கள் பொது போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் இன்றி பயணம் செய்து வருகிறார்கள். மாஸ்க் அணிந்தால்தான் பேருந்தில் அனுமதி என சொல்லப்பட்டது. ஆனால் இன்று பேருந்துகளில் தாடி மாஸ்கை தான் பார்க்க முடிகிறது. அதிலும் சிலர் மாஸ்க் அணியாமல் உள்ளனர்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

பொங்கல் பண்டிகையின் போது புறநகர் பகுதிகளுக்கு சென்ற பேருந்துகளில் அரசு உத்தரவான 75 சதவீத இருக்கை மட்டுமே நிரப்பி இருக்க வேண்டும் என்ற விதி காற்றில் பறக்கவிடப்பட்டு வெற்றிலை போல் பயணிகள் தொற்றிக் கொண்டு சென்ற அதிர்ச்சி சம்பவமும் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு சென்றவர்களில் யாருக்கேனும் கொரோனா பரவல் ஏற்பட்டால் அது அவருடன் பயணிப்பவர்களுக்கும் பரவும் என்பது அனைவரும் அறிந்ததே.

இரு தவணைகள்

இரு தவணைகள்


கொரோனா தடுப்பூசிகள் இரு தவணைகளையும் போட்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பொது போக்குவரத்தில் பயணிகள் பயணிக்க இரு தடுப்பூசி கட்டாயம் என்ற விதிமுறையை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்படும்.

Recommended Video

    Vaccine மூலம் கிடைக்கும் பலன்.. அதிகாரிகள் சொன்ன தகவல்
    உயிரிழப்புகள்

    உயிரிழப்புகள்

    அது போல் வெளியூர்களுக்கு முன்பதிவு செய்யும் போது பேருந்து பயணிகளுக்கு இரு தவணை தடுப்பூசிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும் என்ற ஒரு விதியையும் கொண்டு வர வேண்டும். இவ்வாறு கொண்டு வந்தால் பேருந்து மூலம் கொரோனா பரவி கேஸ் சீரியஸாகும் நிலை குறையும். என்னதான் கொரோனா பரவினாலும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்கும். இது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்தால் மேலும் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

    English summary
    Tamilnadu government should make compulsory for publis transporters to do 2 vaccines.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X