சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்

Google Oneindia Tamil News

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மொத்தம் 69% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

TN Governor grants assent to Vanniyar reservation Bill

இந்த நிலையில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வேண்டும் என்பது பாமகவின் கோரிக்கை. பின்னர் மிக பிற்படுத்தபட்டோர் பிரிவில் உள் இடஒதுக்கீடு தேவை என கோரியது பாமக.

இந்த கோரிக்கையை ஏற்று மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%; சீர் மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது; 6 மாதத்திற்கு பின்னர் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: வன்னியர் உள்ஒதுக்கீடு தி.மு.கவுக்கு பாதிப்பா?தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: வன்னியர் உள்ஒதுக்கீடு தி.மு.கவுக்கு பாதிப்பா?

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

English summary
Tamilnadu Governor Banwarilal Purohit granted assent to Vanniyar reservation Bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X