சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஐபி சீக்ரெட்".. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு மேலிடம் தந்த அசைன்மென்ட்?.. 4 பக்கமும் திரும்பும் போகஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்று இருக்கும் ஆர். என் ரவிக்கு டெல்லி மேலிடம் பல முக்கிய அசைன்மென்ட்களை கொடுத்து இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. டெல்லி சென்றுவிட்டு இன்று தமிழ்நாடு திரும்பும் ஆளுநர் பல முக்கியமான விஷயங்களில் வரும் நாட்களில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் 15-வது ஆளுநராக ஆ. என் ரவி பதவி ஏற்றுள்ளார். நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர். என் ரவி தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். காஷ்மீர், நாகலாந்து போன்ற பிரச்சனை நிறைய பகுதிகளில் முக்கிய பொறுப்புகளை கவனித்தவருக்கு தமிழ்நாடு ஆளுநராக பதவி வழங்கப்பட்டு உள்ளது. ஆர்என் ரவி கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர்.

மேலும் 3 கிலோ தங்கம் சிக்கியது.. சிக்கலில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்.. ஏன்? மேலும் 3 கிலோ தங்கம் சிக்கியது.. சிக்கலில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்.. ஏன்?

அதன்பின் சிபிஐ அமைப்பில் சில காலம், பின்னர் மத்திய புலனாய்வு பிரிவில் சில காலம் என்று உயரிய பொறுப்புகளை வகித்து இருக்கிறார். தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் மிக மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் ஆர். என் ரவி ஆளுநராக பணியமர்த்தப்பட்டு இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

ஆளுநராக பதவி ஏற்றபின், ஆர். என் ரவி, நான் சட்டத்திற்கு உட்பட்டே செயல்படுவேன். ஆளுநருக்கு இருக்கும் கடமைகளை செய்வேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இவரின் நியமனத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டிற்கு ஏன் உளவுத்துறையில் வேலை பார்த்த ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்று விமர்சனங்கள் வைத்து இருந்தனர். ஆனால் அரசியலமைப்புச் சட்டப்படியே செயல்படுவேன் என்று ஆளுநர் ஆர். என் ரவி பதவி ஏற்பிற்கு பின் குறிப்பிட்டு இருந்தார்.

சந்திப்பில் பேசியது என்ன?

சந்திப்பில் பேசியது என்ன?

இந்த நிலையில் பதவி ஏற்றபின் பெரிதாக மீட்டிங் எதையும் நடத்ததாக ஆர். என் ரவி திடீரென தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து பேசினார். இப்படி டிஜிபியை ஆளுநர் அழைத்து பேசியது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் இது சாதாரணமாக நடக்கும் சந்திப்புதான். பொதுவாக ஆளுநர் புதிதாக பதவி ஏற்றால் மாநில சட்ட ஒழுங்கு குறித்து தெரிந்து கொள்ள டிஜிபியை சந்திப்பார். அதேபோல்தான் இந்த சந்திப்பு நடைபெற்றது.

டெல்லி டிரிப்

டெல்லி டிரிப்

மாநில சட்ட ஒழுங்கு, பிற மாநில எல்லையோர ஊர்களில் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு குறித்து இவர் இந்த மீட்டிங்கில் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இந்த மீட்டிங்கிற்கு பின் நேற்று முதல்நாள் காலை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லி சென்றார். இன்றுதான் இவர் தமிழ்நாடு திரும்புகிறார். இந்த டெல்லி பயணத்தில் இவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரை சந்தித்தார். அதோடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சந்தித்து நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசியபோது வந்த கருத்து வருமாறு.

முக்கிய அசைன்மென்ட்

முக்கிய அசைன்மென்ட்

பல்வேறு விஷயங்கள் குறித்து இவர் இந்த சந்திப்பில் பேசி இருக்கலாம் என்கிறார்கள். தமிழ்நாடு அரசியல் நிலவரம், தென்னிந்திய அரசியல் நிலவரம், பாஜக கட்சியின் பலம், ஆளும் கட்சியின் அரசியல் செயல்பாடுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பல விஷயங்களை ஆளுநர் ஆர்என் ரவி இந்த இரண்டு நாள் பயணத்தில் டெல்லி மேலிடத்திற்கு தெரிவித்ததாக என்று கூறப்படுகிறது. ஆளுநரின் தமிழ்நாடு வருகைக்கு பின் அவர் 4 முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாடு மத்திய உளவு ரிப்போர்ட்

தமிழ்நாடு மத்திய உளவு ரிப்போர்ட்

முதல் விஷயம் பாதுகாப்பு தொடர்பான உளவு தகவல்கள். ஏற்கனவே உளவுத்துறையில் இருந்தவர் என்பதால் மத்திய அரசுக்கு இவர் பாதுகாப்பு தொடர்பான உளவு ரிப்போர்ட்களை அளிக்க முடியும். முக்கியமாக இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம், தமிழ்நாடு கடல் எல்லைகளில் உள்ள பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆளுநர் உளவுத்துறை மூலம் தகவல்களை திரட்டி டெல்லி மேலிடத்திற்கு அனுப்ப வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்தும் உளவு ரிப்போர்ட்களை திரட்ட முடியும். ஐபி சீக்ரெட்டு என்று அழைக்கப்படும் முக்கியமான உளவுத்துறை தகவல்களான இவர் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆளும் அரசு அரசியல் நிலவரம்

ஆளும் அரசு அரசியல் நிலவரம்

இரண்டாவதாக ஆளும் கட்சி குறித்தும், திமுகவின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் கண்டிப்பாக ஆளுநர் கவனம் செலுத்துவார் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் இருந்து திரும்பியதும் ஆளுநர் ஆர்என் ரவி கண்டிப்பாக ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த அதிக வாய்ப்புள்ளதாகவும், இது குறித்து டெல்லி தலைமைக்கு அவர் தகவல் அனுப்பி வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. முந்தைய ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் ஆளும் தரப்புடன் நட்பாக இருந்த நிலையில் ஆர். என் ஆவி கொஞ்சம் ஸ்டிரிக்ட் நிலைப்பாட்டை கடைபிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

பாஜக குறித்து ரிப்போர்ட்

பாஜக குறித்து ரிப்போர்ட்

மூன்றாவதாக ஆளுநர் ஆர். என் ரவி கண்டிப்பாக பாஜக குறித்தும் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜக எப்படி செயல்படுகிறது, கட்சிக்குள் என்ன பிரச்சனை இருக்கிறது, சமீபத்தில் கட்சிக்கு எதிராக மேலிடத்திற்கு பறந்த புகார்கள் உள்ளிட்ட பல விஷயங்களை ஆர். ரவி நேரடியாக கண்காணிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. டெல்லி மேலிடம் இதற்கான அசைன்மென்டை அவருக்கு கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக நிலை

அதிமுக நிலை

கடைசியாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் அரசியல் நிலைப்பாடுகள், கட்சிக்குள் ஏற்படும் பிரச்சனைகள், தலைவர்கள் எதிர்கொள்ளும் வழக்குகள் குறித்தும் ஆளுநர் ஆர். என் ரவி அதிக கவனம் செலுத்துவார் என்றே கூறப்படுகிறது. முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அதிமுக தரப்பு நெருக்கமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது இருக்கும் ஆளுநர் ஆர். என் ரவி அதிமுக குறித்த முக்கிய தகவல்களை மேலிடத்திற்கு அனுப்ப வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 4 விஷயங்கள் மீதுதான் ஆளுநர் அதிக கவனம் செலுத்துவார்.. டெல்லி பயணத்திலும் இதை பற்றியே விவாதிக்கப்பட்டு இருக்கும் என்று அரசியல் தரப்பு விமர்சகர்கள் கருத்தாக உள்ளது.

இது அலுவல் ரீதியானது அல்ல

இது அலுவல் ரீதியானது அல்ல

அலுவல் ரீதியாக மேற்சொன்ன விஷயங்கள் ஆளுநரின் பணியல்ல, ஆனால் இதுபோன்ற விஷயங்களில் ஆளுநர் கவனம் செலுத்தவும் வாய்ப்புள்ளது, அதிலும் இவர் மத்திய உளவுப்பிரிவின் உயர் பொறுப்பில் இருந்ததால் அதற்கான பணி இவருக்கு எளிதானது என்பதால் தான் காங்கிரஸ்,விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன, சிலர் எதிர்க்காவிட்டாலும் அவர்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளனர் என்பது அரசியல் விமர்சகர்கள் கூற்றாக உள்ளது.

English summary
Tamilnadu Governor RN Ravi may focus on 4 important things in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X