சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரபரப்பான கட்டத்தில் தமிழ்நாடு அரசியல்.. நாளை டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர்!

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை டெல்லி செல்ல முடிவு எடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் டெல்லி பயணம்- வீடியோ

    சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நாளை டெல்லி செல்ல உள்ளார்.

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

    TN Governor will go to Delhi amidst the expectations on the verdict of 18 MLA disqualification case

    இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்டது. இந்த தீர்ப்பை பொறுத்துதான் தமிழக அரசியல் அடுத்த கட்ட நகர்வை சந்திக்கும். ஏற்கனவே தீர்ப்பிற்கு தயாராகும் விதத்தில் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களை குற்றாலத்தில் தங்க வைத்துள்ளார்.

    இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்று எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கும் சமயத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை டெல்லி செல்ல முடிவு எடுத்துள்ளார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    [தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் குற்றாலத்தில் கேம்ப்.. தாமிரபரணியில் தலைமுழுகல்.. நல்ல தீர்ப்புக்காக!]

    நாளை ஆளுநர் புரோகித் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார்.இந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் டெல்லி செல்லும் ஆளுநரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் ஆளுநரின் பங்கு முக்கியமாகும். இதன் காரணமாக அவரது டெல்லி பயணம் கவனம் ஈர்த்து இருக்கிறது.

    English summary
    TN Governor will go to Delhi amidst the expectations on the verdict of 18 MLA disqualification case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X