சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    NEET Issue | நீட் தேர்வு பிரச்னை: முதல்வர் பழனிச்சாமி அதிரடி முடிவு- வீடியோ

    சென்னை: நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் மத்திய அரசு விளக்காம் அளிக்காவிட்டால் மீண்டும் சிறப்பு கூட்டம் கூட்டி முடிவெடுக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசின் நீட் தேர்வு முடிவினை எதிர்க்க முதல்வர் பழனிச்சாமி தயாராவது உறுதியாகி உள்ளது.

    நேற்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, நீட்விலக்கு மசோதாவை கடந்த 2017ம் ஆண்டே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டோம் என தெரிவித்திருந்தது.

    இதனால் சட்டசபையில் இன்று கேளவிநேரம் முடிந்த பின்னர், நீட்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி அனுப்பபட்ட தீர்மானம் திருப்பி அனுப்பபட்ட விவகாரம் தொடர்பாக திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

    ஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க!! ஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க!!

    மசோதா நிராகரிப்பு

    மசோதா நிராகரிப்பு

    அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவை வித் ஹெல்ட் என குறிப்பிட்டால் நிராகரிப்பு என்று தான் அர்த்தம். நீட் விவகாரத்திலும் குடியரசுத் தலைவர் வித் ஹெல்ட் என்று தான் குறிப்பிட்டு அனுப்பி உள்ளார். எனவே மீண்டும் சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

    பலமுறை கடிதம்

    பலமுறை கடிதம்

    இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், "நீட் விலக்கு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதே தவிர ரத்துசெய்யப்படவில்லை. நாங்கள் நீட் விலக்கு மசோதாவை நிறுத்தி வைத்ததற்கான காரணம் என்ன என்று கேட்டு மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் பதில் இல்லை.

    எதையும் மறைக்கவில்லை

    எதையும் மறைக்கவில்லை

    நீட் மசோதா நிரகாரிக்கப்பட்டதாக நேற்று நீதிமன்றத்தில்தான் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு இதுவரை அனுப்பிய எல்லா கடிதத்திலும் நீட் விலக்கு மசோதா குறித்து வித்ஹெல்ட் என்ற வார்த்தை தான் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரிஜெக்ட்என்ற வார்த்தை இடம்பெறவில்லை. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இமெயிலில் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் அளிக்கும்போது தான் நிறுத்திவைத்து, நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம். நீட் விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை. தேவைப்பட்டால் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்படும்" என்றார்.

    மீண்டும் நீட் மசோதா

    மீண்டும் நீட் மசோதா

    இதைத்தொடர்ந்து பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாணவர்களின் நலன் கருதி ஒருமித்த கருத்தோடு தீர்மானம் நிறைவேற்றினோம். நீட் விவகாரத்தில் தேவைப்பட்டால் மீண்டும் சிறப்பு கூட்டம் கூட்டப்படும். மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வராவிட்டடால் சிறப்பு கூட்டம் கூட்டிமுடிவு எடுக்கப்படும் என்றார். இதன் மூலம் மத்திய அரசின் நீட் தேர்வு முடிவுக்கு எதிராக முதல்வர் பழனிச்சாமி மசோதா நிறைவேற்ற தயாராவது உறுதியாகி உள்ளது.

    English summary
    tn cm edappadi palanisamy said that if central government not give responsible answer, again assembly meeting conduct for neet exemption bill
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X