சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணைய செயலாளராக சுப்பிரமணியன் நியமனம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சுப்பிரமணியன் மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

TN Govt appoints Subramanian as Secretary of Tamil Nadu State Election Commission

மேலும் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

TN Govt appoints Subramanian as Secretary of Tamil Nadu State Election Commission

ஸ்டாலின் எதிர்ப்பு

இதனிடையே தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பழனிசாமியை மாற்றியதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜே.என்.யூ பல்கலை. வளாகத்தில் விவேகானந்தர் சிலை சேதம்டெல்லி ஜே.என்.யூ பல்கலை. வளாகத்தில் விவேகானந்தர் சிலை சேதம்

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் திரு.பழனிச்சாமி அவர்களை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது!

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் "விசுவாசமாகப்" பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?

இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினரை ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Tamilnadu Govt today appointed L Sbramanian as Secretary of Tamil Nadu State Election Commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X