சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய கல்வி கொள்கையின் அம்சங்கள் குறித்து ஆராய கல்வியாளர்கள், அதிகாரிகள் கொண்ட குழு - தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அம்சங்கள் குறித்து ஆராய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கைக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதில் மும்மொழி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

TN Govt constituets committee for NEP

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருந்தது வேதனை தருவதாக கூறியிருந்தார். மேலும் தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் தொடரும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதிய கல்வி கொள்கையின் பிற அம்சங்கள் குறித்தும் முதல்வர் கருத்து தெரிவிக்க வேண்டும்; எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆராய குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் வழக்கு.. முதல்ல அந்த பன்னோக்கு விசாரணை அமைப்பு செயல்படுதா.. ஹைகோர்ட் பொளேர் கேள்வி!ராஜீவ் வழக்கு.. முதல்ல அந்த பன்னோக்கு விசாரணை அமைப்பு செயல்படுதா.. ஹைகோர்ட் பொளேர் கேள்வி!

இக்குழுவில் கல்வியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

English summary
Tamilnadu Govto today constituted a committee of educationists and senior officials to study all aspects of New Education Policy 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X