சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. இதனால் இன்று வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனையடுத்து நாடு முழுவதும் இன்று முதல் வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்படுகின்றன. ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் சாப்பிடவும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

TN Govt not to allow to open Worship Places from Tomorrow?

தமிழகத்தில் ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் முழு அளவில் செயல்பட உள்ள நிலையில் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் வழிபாட்டு தலங்கள் நாளை திறக்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே வழிபாட்டுத் தலங்கள் திறப்பு தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி இருக்கிறது.

Recommended Video

    கொரோனா சென்னையை மீட்டெடுக்க நாமே தீர்வு திட்டம் - தன்னார்வலர் மக்கள்‌ படை - கமல்ஹாசன்

    டோக்லாமில் வாங்கிய அடி.. லடாக் பிரச்சனையில் வாயை திறக்காத சீன ஊடகங்கள்.. மௌனத்தின் பின்னணி!டோக்லாமில் வாங்கிய அடி.. லடாக் பிரச்சனையில் வாயை திறக்காத சீன ஊடகங்கள்.. மௌனத்தின் பின்னணி!

    ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுவதில் தமிழக அரசு தயக்கம் காட்டலாம் எனவும் கூறப்படுகிறது.

    English summary
    Sources said that Tamilnadu Govt may not allow to opne the worship places from Tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X