சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன வேகம்.. அவசர சட்டம் .. அபராதம் யார் யாரெல்லாம் விதிப்பார்கள்.. பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா கால விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் தமிழக அரசு அண்மையில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் படி இனி தமிழகத்தில் பொது இடங்களில் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு யார் யார் அபாரதம் விதிக்கலாம் என்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு செப்டம்பர் 1ம் தேதி முதல் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு தளர்வு அளித்தது. தற்போது கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பி உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் ஒவ்வொருவரும் வெளியில் செல்லும் போதும், ஒருவருக்கு ஒருவர் பேசும் போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டியது அவசியம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.

பொது இடங்கிளில் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்றும் கூட்டம் கூடுவது அறவே கூடாது என்றும் எச்சரித்து வருகிறது. ஆனால் அரசின் அறிவிப்புகளை பலர் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது.

தமிழகத்தில் சூப்பர் மாற்றம் இன்று.. கிடுகிடுத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை.. குறைந்தது கொரோனா! தமிழகத்தில் சூப்பர் மாற்றம் இன்று.. கிடுகிடுத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை.. குறைந்தது கொரோனா!

தமிழ அரசு

தமிழ அரசு

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகள் எடுத்த அரசு இறுதியாக அபராதம் விதித்தால் மக்கள் பயந்து விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என நினைத்து அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த அவசர சட்டம் கொரோனா கால விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது.

தனி மனித இடைவெளி

தனி மனித இடைவெளி

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி, பொது இடங்களில் முககவசம் (மாஸ்க்) அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

தனிமைப்படுத்துதல் விதிமுறை

தனிமைப்படுத்துதல் விதிமுறை

பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் என்று தமிழக அரசு அரசாணையில் கூறியுள்ளது.
இதேபோல் கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கடைகளுக்கு 5000 அபராதம்

கடைகளுக்கு 5000 அபராதம்

தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத சலூன், ஸ்பா, கடைகள், ஜிம் ஆகியவற்றுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத தனிநபர்களுக்கு 500 ரூபாய் அபாதம் விதிக்கப்படும் என்றும், பொதுவணிக நிறுவனங்கள் அல்லது வாகனங்கள் பின்பற்றாவிட்டால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பு

அரசு அறிவிப்பு

இந்நிலையில் ஊரடங்கை மீறுவோருக்கான அபராதத்தை யாரெல்லாம் வசூலிக்கலாம் என்ற விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி பொதுசுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம். வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம. காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்களும் அபராதம் வசூலிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

English summary
The state of Tamil Nadu has introduced an emergency law to impose fines on those who do not abide by the rules of the Corona period. now TN govt order who can colllect fines on those who do not abide by the rules of the Coronavirus .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X