சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

9ம் வகுப்பு, 11ம் வகுப்பு மாணவர்களே ரெடியா.. சூப்பர் செய்தி.. தியேட்டர்களுக்கும் குஷியான அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பிப்ரவரி 8ம் தேதி முதல் 9ம் வகுப்பு, 11ம் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Recommended Video

    சென்னை: லாக்டவுன் பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு: 9, 11ம் வகுப்புகள்.. கல்லூரிகள் திறக்க அனுமதி!

    கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரங்கு பிப்வரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்ட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் தமிழக அரசு இந்த முறை ஏராளமான தளர்வுகளை அறிவித்துள்ளது.

    கடந்த 9மாதங்களாக செயல்படாமல் இருந்த பள்ளிகள் கடந்த மாதம் முதல் செயல்பட தொடங்கின. முதற்கட்டமாக பொதுத்தேர்வை சந்திக்கும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    சசிகலாவை வரவேற்க தயாராகும் பரபர ரிசார்ட் - சென்னை திரும்புவது எப்போது?சசிகலாவை வரவேற்க தயாராகும் பரபர ரிசார்ட் - சென்னை திரும்புவது எப்போது?

    11ம் வகுப்பு

    11ம் வகுப்பு

    இந்நிலையில் வரும் 8ம் தேதி முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளும் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகள் (9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மட்டும்) 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனுமதி

    அனுமதி

    இதேபோல் கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டயப் படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் 8.2.2021 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது,.

    100 சதவீதம் இருக்கை

    100 சதவீதம் இருக்கை

    மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள் வணிக வளாகங்களில் உள்ள (மல்டிபிளக்ஸ்) திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்தி 01.02.2021 முதல்
    செயல்பட அனுமதி அளித்துள்ளது.

    அரசு அனுமதி

    அரசு அனுமதி

    உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொதுமக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

    English summary
    Following the standard guidelines, the Government of Tamil Nadu has given permission to start the 9th and 11th classes from February 8. Similarly, the Tamil Nadu government has given permission for 100 percent seats in theaters.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X