சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் மீதான தமிழக அரசின் அவதூறு வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்.. ஏப்.8ல் ஆஜராக உத்தரவு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகளின் விசாரணையை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதோடு, வரும் ஏப்ரல் 8 ம் தேதி ஸ்டாலினை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

மாநகராட்சி டெண்டர்கள் குறித்தும், மத்திய அரசின் தரவரிசை பட்டியலின் படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்க பட்டது குறித்தும், குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாகவும் தமிழக அரசை விமர்சித்து ஸ்டாலின் பேசியது தொடர்பான செய்தி முரசொலி நாளிதழில் முறையே செப்டம்பர் 4, டிசம்பர் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் செய்தி வெளியானது..

TN Govts Defamation case against MK Stalin shift to Special Court

அதனை தொடர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் தமிழக முதலமைச்சர் சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.. அந்த மனுவில், தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்..

இந்த வழக்குகளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஸ்டாலினுக்கு அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், சம்மனை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரினார்..

ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் இந்த வழக்கை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதாகவும், வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்

English summary
TamilNadu Govt's defamation case against DMK President MK Stalin is shifted to a Special Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X