சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு மருத்துவ கல்லூரியில் சேர அரசு பள்ளி மாணவர்கள் யாருமே தகுதி பெறவில்லை... ஷாக் தகவல்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு மருத்து கல்லூரிகளில் சேர அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட தகுதி பெறவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கிராமப்புற, ஏழை ஒடுக்கப்பட்ட மக்களின் உயர் கல்வி கனவில் மண் அள்ளிப் போட்டது நீட் எனும் நுழைவுத் தேர்வு. இந்த நீட் தேர்வானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.

TN Govt school students not eligible for Govt medical colleges

தமிழக மாணவர்கள் பெரும்பாலானோர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி கற்றவர்கள். இதனால் தமிழக மாணவர்கள் நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாத்தியமற்ற ஒன்று.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற ஒரு மாணவர்கூட நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 1,23,078 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் 59,785 பேர்தான் தேர்ச்சி பெற்றனர். 31,239 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள்.

மின்னல் வேகத்தில் வந்த பைக்.. நடு ரோட்டில் பலியான மூதாட்டி.. நாகர்கோவிலில் பரபரப்பு சம்பவம்மின்னல் வேகத்தில் வந்த பைக்.. நடு ரோட்டில் பலியான மூதாட்டி.. நாகர்கோவிலில் பரபரப்பு சம்பவம்

அரசு பள்ளிகளில் பயின்ற 2,000 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் 4 மாணவர்கள் மட்டும்தான் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

இந்த 2,000 பேரில் ஒருவர் கூட அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெறும் அளவுக்கு மதிப்பெண் பெறவில்லை. தமிழக அரசு 412 நீட் பயிற்சி வகுப்புகளை நடத்தியிருந்தது. ஆனால் மாணவர்களால் அரசு மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான மதிப்பெண்களை பெற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to the data, Tamilnadu govt school students are not eligible for the Govt medical colleges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X