சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்தம் 10 லட்சம்.. "தட்டி தூக்கிய எடப்பாடியார்".. 20 வருடங்களில் எந்த அரசும் செய்யாத சூப்பர் சாதனை!

Google Oneindia Tamil News

சென்னை: 20 வருஷம் இல்லாத ஒரு சரித்திர சாதனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது நிகழ்த்தி உள்ளார்.. அறிவிப்புகளையும், சலுகைகளையும் வாரி வாரி வழங்கி, தமிழக பள்ளி மாணவர்களின் மனதில் குடிபுகுந்துள்ளார்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய பாடத்திட்டம், பயோமெட்ரிக் முறை வருகை பதிவு, இலவச நீட் தேர்வு மையங்கள், அரசு பள்ளியில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் என அடுக்கடுக்காக அவர் செய்து வரும் திட்ட செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

பூ ஒன்று புயலாக மாறியது... சர்..சர்... டுர்..டுர்... பைக் ஆம்புலன்ஸ் ஓட்டி அசத்திய ரோஜா..!பூ ஒன்று புயலாக மாறியது... சர்..சர்... டுர்..டுர்... பைக் ஆம்புலன்ஸ் ஓட்டி அசத்திய ரோஜா..!

அறிவிப்பு

அறிவிப்பு

பள்ளி மாணவ மாணவிகளை வெளிநாட்டிற்கு அனுப்பி, அந்த நாட்டின் தொழில்நுட்பங்கள் குறித்து கற்பிக்கப்படும் என செங்கோட்டையன் ஒருமுறை அறிவித்திருந்தார்.. அதன்படியே 50 மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியும் வைத்தார்.. அந்த சமயத்தில், கல்வி திட்டத்திலேயே இயற்கையையும் பாதுகாக்கும்படியான ஒரு அறிவிப்பினை அமைச்சர் வெளியிட்டிருந்தார். அதன்படி, மரக்கன்று நட்டால் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றார். இதுதான் மாணவர்களுக்கான முதல் உற்சாகமான செய்தி என்றே சொல்லலாம்.

செங்கோட்டையன்

செங்கோட்டையன்

இப்படித்தான் அதிரடிகளை செங்கோட்டையன் கையில் எடுத்தார்.. ஆனால் அனைத்துக்கும் பின்னணியில் முதல்வர் எடப்பாடியாரின் செயல்பாடுகள் பாலமாக இருந்ததை மறுக்க முடியாது.. மற்ற துறைகளைவிட, பள்ளிக்கல்வி துறையில் முதல்வர் அதிக கவனம் செலுத்தினார்.. அதல பாதாளத்தில் பல அரசு பள்ளிகள் பராமரிப்பற்று தொங்கி கொண்டிருந்தன.. தனியார் பள்ளிகளின் கலர் கலர் விளம்பரங்களை பார்த்து அங்கு பெற்றோர்களும் மொய்க்க தொடங்கினர்.

பாடப்புத்தகம்

பாடப்புத்தகம்

இப்படிப்பட்ட சமயத்தில்தான், முதல்வரின் 14 வகையான நலத்திட்ட உதவிகள் பெரும் வரவேற்பை பெற்றது.. இலவச பாடப்புத்தகம், யூனிபார்ம், சைக்கிள், லேப்டாப் என ஒரு மாணவனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்தார்.. இதை பெற்றோர்களே எதிர்பார்க்கவில்லை.. தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் அதிகமாக சேர்க்க தொடங்கினர்.

 மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கை

அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர்.. 10 நாட்களுக்கு முன்புகூட ஒரு செய்தி வெளியானது.. ரெண்டே நாட்களில் இரண்டரை லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று உள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்திருந்தார். அதாவது, இந்த ஆண்டு மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.. இது கடந்த 20 வருடங்களில் இல்லாத ஒரு சாதனையாகும்.

 மாற்றங்கள்

மாற்றங்கள்

இதற்கு முக்கிய காரணமே, முதல்வரின் அதிரடிகளும், பள்ளிக்கல்வி துறையில் மாற்றங்களும், பல சீர்திருத்தங்களும்தான்.. அரசு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் தாராளமாக வழங்கப்படுகின்றன.. தரமில்லாதது என்று சொல்லப்பட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் சீர்செய்யப்பட்டன.

நடவடிக்கைகள்

நடவடிக்கைகள்

இதனிடையே கொரோனா தொற்று விவகாரம் தலைதூக்கினாலும், ஸ்மார்ட் கிளாஸ், ஆன்லைன் கிளாஸ் என நடவடிக்கைகளை கையில் எடுத்தது.. தங்கள் குழந்தைகளுக்கு கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்று உணர்ந்த பெற்றோர்களும் இந்த ஆன்லைன் கிளாஸ்களை வரவேற்றனர்.. தங்கள் பிள்ளைகளை முழுமூச்சில் படிக்க வைக்க உதவிகளை செய்து தந்தனர்.

 ஊதியம்

ஊதியம்

அதுமட்டுமல்ல, லாக்டவுன் காரணமாக எத்தனையோ அரசு துறைகளில், பல ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் இருந்தாலும், பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் சம்பள பிடித்தம் செய்யப்படவே இல்லை.. எல்லா காலத்திலுமே அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய முக்கியத்தை தமிழக அரசு செய்து வரும்.. அந்த வகையில், இவ்வளவு நிதி நெருக்கடி இருந்தும் ஆசிரியர்களின் ஊதியத்தில் மட்டும் கை வைக்கவில்லை.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இன்றுகூட செங்கோட்டையன் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. தனியார் பள்ளியில் பணிபுரிந்து தற்போது வேலை இல்லாமல் உள்ள ஆசிரியர்களை தேவைப்பட்டால் அரசுப் பள்ளிக்கு தற்காலிக பணிக்கு எடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.. இது வேலையின்மையை நீக்குவதுடன், மாணவர்களுக்கும் பலன் தரக்கூடியதாக இருக்கும்.

வரவேற்பு

வரவேற்பு

ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் இடையே, "அரியர்களின் அரசன்" என்பது முதல் "பாகுபலி " வரை பல படங்களை சுமந்து வருகிறார் எடப்பாடியார்.. இப்போது 20 வருடங்களில் இல்லாத ஒரு சாதனையை நிகழ்த்தி இருப்பது இன்னும் அவரது சாதனையில் ஒரு மைல்கல்.. இது அவ்வளவும் வரப்போகிற தேர்தலில் ஓட்டாக மாறுவது நிச்சயம் என்கிறார்கள்!

English summary
TN Govt schools register big record in admitting more students
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X