சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கட்டாய மொழி திணிப்புக்குதான் எதிர்ப்பு- பிற மொழி கற்க தடை இல்லை: அமைச்சர் உதயகுமார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கட்டாய மொழி திணிப்பைத்தான் எதிர்க்கிறோமே தவிர பிறமொழியை கற்றுக் கொள்ள தடை எதுவும் இல்லை என்று தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

Recommended Video

    தமிழகத்தில் கட்டாய மொழி திணிப்புக்குதான் எதிர்ப்பு- பிற மொழி கற்க தடை இல்லை: அமைச்சர் உதயகுமார்

    சென்னை எண்ணூர் கத்திவாக்கத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனம் இணைந்து எண்ணூர் ஆல் இந்தியா ரேடியோ நகரை சேர்ந்த 500 பேருக்கு உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டன.

     TN Govt should oppose Hindi imposition, says Minister Udayakumar

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவொற்றியூரில் உள்ள 1504 தெருக்களில் 517 தெருக்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் திருவொற்றியூர் பகுதியில் பிறநோய் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

     TN Govt should oppose Hindi imposition, says Minister Udayakumar

    சென்னையில் அதிகளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்கள் மூலமாக ஆரம்ப நிலையிலேயே கொரோனா கண்டறியபடுவதால் கொரோனா பரவலை தடுப்பது எளிதாக உள்ளது. தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என அறிவித்த முதல்வரின் அறிவிப்பை அனைத்து கட்சியினரும் வரவேற்றுள்ளனர்.

     TN Govt should oppose Hindi imposition, says Minister Udayakumar

    கல்வி கொள்கையை ஆராய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கைக்கு பின்னர் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். தமிழக கல்வி முறையில் கட்டாய மொழி திணிப்பை எதிர்க்கிறோமே தவிர பிற மொழிகளைக் கற்பதில் எந்த தடையுமில்லை.

    5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக! 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக!

    தமிழகத்தில் தினமும் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளில் 10 சதவிகித பாதிப்பு தான் தற்போது உள்ளது, இவ்வாறு உதயகுமார் கூறினார்.

    English summary
    Tamilnadu Minister Udayakumar said that state govt should oppose to Hindi Imposition.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X