சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ. 15,128 கோடி முதலீடு- 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ரூ ரூ. 15,128 கோடி முதலீட்டுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை தலைமை செயலகத்தில் ஜெர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

TN Govt signs MoUs with 17 firms for Rs.15,128 Crore investment

இதில் 9 நிறுவனங்கள் நேரடியாகவும், 8 நிறுவனங்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. தமிழகத்தில் மொத்தம் ரூ. 15,128 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திடப்பட்டன.

இலவச மின்சாரத்தைத் துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது- வைரமுத்துஇலவச மின்சாரத்தைத் துண்டித்தால் கொரோனாவின் எதிர்கால அலைகளை எதிர்கொள்ள முடியாது- வைரமுத்து

இப்புதிய ஒப்பந்தங்கள் மூலம் 47,150 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பொன்னேரி திட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரூ.3000 கோடி முதலீட்டில் இந்திய - இங்கிலாந்து கூட்டு முயற்சியான Chennai Power Generation Limited நிறுவனத்தின் இயற்கை எரிவாயு மூலம் 750 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்திற்கு MOU கையெழுத்தானது. இதன்மூலம் சுமார் 3,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.

TN Govt signs MoUs with 17 firms for Rs.15,128 Crore investment

ஒரகடம் சிப்காட்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.900 கோடி முதலீட்டில் சுமார் 600 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சார்ந்த Polymatech Elections நிறுவனத்தின் Semiconductor Chips உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

TN Govt signs MoUs with 17 firms for Rs.15,128 Crore investment
English summary
Tamilnadu Govt today signed Mous with the 17 firms for Rs.15,128 Crore investment in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X