சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆள்பற்றாகுறையில் பொதுப்பணித்துறை... புதிய ஏ.இ.க்களை நியமிக்க அரசு பரிசீலனை

Google Oneindia Tamil News

சென்னை: பொதுப்பணித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களால் திட்ட அறிக்கை தயார் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் புதிய உதவி பொறியாளர், உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் ஆள் பற்றாகுறை பிரச்சனை தீர்க்கப்பட்டு பொதுப்பணித்துறையை முழு வீச்சில் செயல்பட வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

கட்சி நிகழ்ச்சிகளுக்கு கல்தா கொடுக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ... நிர்வாகிகள் புலம்பல்கட்சி நிகழ்ச்சிகளுக்கு கல்தா கொடுக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ... நிர்வாகிகள் புலம்பல்

முக்கியத்துறை

முக்கியத்துறை

தமிழக அமைச்சரவையில் உள்ள துறைகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறை என்றால் அது பொதுப்பணித்துறை மட்டுமே. பவர்ஃபுல் துறையான இந்தத் துறை மக்களின் அடிப்படை தேவைகளையும், பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக் கூடிய பணிகளை செய்து வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தத் துறையை தாமே நிர்வகித்து வருகிறார்.

திட்ட அறிக்கை

திட்ட அறிக்கை

இந்நிலையில் பொதுப்பணித்துறையில் நிரப்பப்படாத காலிபணியிடங்களால் திட்ட அறிக்கை தயாரிக்க கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பொதுப்பணித்துறையை பொறுத்தவரை திட்ட அறிக்கை என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அந்த அறிக்கை தயார்செய்யப்பட்டு அரசிடம் சமர்பித்தால் தான், பணிகளுக்கு அரசு நிதியே ஒதுக்கீடு செய்யும்.

முக்கியப் பணி

முக்கியப் பணி

தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வளப்பிரிவு, கட்டுமானம் ஆகிய பிரிவுகள் உள்ளன. இதன் மூலம் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கட்டுமானப்பணிகள் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், மக்களோடு நேரடியாக தொடர்பு கொண்ட பணிகள் என்பதால் அரசு மற்ற துறைகளை விட இந்தத் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது.

புதிய பணியிடங்கள்

புதிய பணியிடங்கள்

இதனிடையே, பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள உதவி பொறியாளர், அலுவலக உதவியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

English summary
tn govt speculation to the recruitment for public works department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X