சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்

Google Oneindia Tamil News

சென்னை: மும்மொழிக் கொள்கையில் தமிழக அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்பது குறித்து முதலமைச்சர் நாளை மறுநாள் அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விகொள்கையை அமல்படுத்துவது குறித்து பொது மக்களின் கருத்து கேட்பதற்காக புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இனி மாணவர்களுக்கு மும்மொழிக்கொள்கை கட்டாயம் ஆக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக இந்தியை தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

tn govt to take a decision in nep

இது தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பை பார்த்த மத்திய அரசு இந்தி கட்டாயம் இல்லை என்று கூறியது. ஆனால் மும்மொழிக் கொள்கையில் இருந்து மத்திய அரசு பின்வாங்கவில்லை. இதனால் தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக கல்வியாளர்கள் இரு மொழிக் கொள்கையே போதுமானது, அதுவே தமிழக அரசின் கொள்கையும் கூட என்று கூறிவருகிறார்கள்.

எப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார் எப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்

அதோடு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் நடைமுறையில் உள்ள இரு மொழிக் கொள்கையே போதுமானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மூன்றாவது மொழி வேண்டாம் என்ற கருத்தே தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. இந்நிலையில் புதியக் கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கையில் தமிழக அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பது குறித்து இதுவரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதனையடுத்து இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதவுள்ளார். அதோடு மும்மொழி கல்வி கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முதல்வர் நாளை மறுநாள் அறிவிப்பார், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வருவது குறித்தும் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது. 1 லட்சத்து 53 ஆயிரத்து 359 மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்க அரசு ஆணை வெளியிட்டது. கடந்த 2016-17, 2017-18 மற்றும் 2018 19 ல் படித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணி வழங்கப்படும். 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் .

English summary
Tamil Nadu government's stand on trilingual education policy will be known tomorrow, said Minister Senkottayan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X