சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பள்ளி கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்- 5,8- பொதுத்தேர்வு குழப்பம் எதிரொலி?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடப்பாண்டில் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

TN Govt transfers School Education Secretary Pradeep Yadav

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் என அரசியல் கட்சிகள், ஆசிரிய சங்கங்கள் தெரிவித்திருந்தன இருப்பினும் தமிழக அரசு 5,8-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவதில் தீவிரம் காட்டியது.

திண்டுக்கல் சீனிவாசன் மட்டுமல்ல.. அதிமுகவில் பல அமைச்சர்கள் அப்படித்தான்.. முக ஸ்டாலின் சுளீர்!திண்டுக்கல் சீனிவாசன் மட்டுமல்ல.. அதிமுகவில் பல அமைச்சர்கள் அப்படித்தான்.. முக ஸ்டாலின் சுளீர்!

இந்நிலையில் திடீரென 5,8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குழப்பங்களால் அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

கைத்தறித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் வேறு சில துறைகளின் செயலாளர்களும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்..

English summary
Tamilnadu Govt today transfered the School Education Secretary Pradeep Yadav from the post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X