சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தடுப்பு நடவடிக்கை.. பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு நிவாரண உதவி.. முதல்வர் சூப்பர் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நோய் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி தமிழக அரசு பரிசீலித்து வருகிறது என்றும் இதற்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Recommended Video

    TN imposes 144 | தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு.. முதல்வர் முக்கிய அறிவிப்பு

    தமிழக சட்டசபையில் இது தொடர்பாக இன்று பேசுகையில் மத்திய அரசால் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது.

    tn govt will announced Relief for poor families who affected by Coronavirus prevention

    அத்தியாவசிய மற்றும் அவசரப்பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது.மாநிலங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

    அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய கட்டடப்பணிகள் தவிர பிற கட்டப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினம் இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக்கூடாது

    அத்தியாவசியப்பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது. அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய கட்டடப்பணிகள் தவிர பிற கட்டப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    எனினும் இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக்கூடாது. தனியார் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும் என்று குறிப்பிட்டு பேசினார்.

    English summary
    tamil nadu CM edappadi k palanisamy will announced Relief for poor families who affected by Coronavirus prevention
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X