சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேமுதிகவை கூல் செய்த எடப்பாடி பழனிசாமி... அவதூறு வழக்குகள் வாபஸ் பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டதன் மூலம் தேமுதிகவை கூல் செய்து விட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தமிழக அரசை பற்றியும், ஜெயலலிதாவை பற்றியும் அவதூறு பேசியதாக விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில், விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை வரிசையாக தமிழக அரசு திரும்பப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடுகள்.. சம்பிரதாயங்கள்.. திகார் சிறையிலிருந்து ப. சிதம்பரம் எப்படி விடுதலை செய்யப்படுவார்?கட்டுப்பாடுகள்.. சம்பிரதாயங்கள்.. திகார் சிறையிலிருந்து ப. சிதம்பரம் எப்படி விடுதலை செய்யப்படுவார்?

விஜயகாந்த் விமர்சனம்

விஜயகாந்த் விமர்சனம்

ஜெயலலிதா தலைமையிலான 2011-2016 ஆட்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. 2012, 2013, 2014, 2016 ஆகிய வருடங்களில் 5-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் தமிழக அரசு சார்பில் விஜயகாந்த் மீது தொடரப்பட்டன. அந்த வழக்குகள் தான் இப்போது திரும்பப் பெறப்படுகிறது.

 வழக்குகள் வாபஸ்

வழக்குகள் வாபஸ்

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அந்த வழக்குகள் மீதான விசாரணை தீவிரம் அடைந்த நிலையில், வழக்குகளை வாபஸ் பெற்றதற்கான அரசாணையை தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

தேமுதிக நிம்மதி

தேமுதிக நிம்மதி

இதையடுத்து விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டன. இதனால் தேமுதிக முகாம் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது. மேலும், வழக்குகள் வாபஸ் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேமுதிகவை கூல் செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

ஆஃப் செய்த அதிமுக

ஆஃப் செய்த அதிமுக

மக்களவைத் தேர்தலில் உரிய கவுரவம் வழங்கவில்லை என்ற கோபம் அதிமுக மீது தேமுதிக தலைமைக்கு உள்ளூர இருந்து வந்தது. இதோடு இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தது தேமுதிக. கூட்டணிக் கட்சி என்பதற்காக இப்படி அனுசரித்துச் சென்றும், அதிமுக உரிய மரியாதை தரவில்லை என்ற கோபம் தேமுதிக தலைமைக்கு இருந்தது. இந்நிலையில் விஜயகாந்த் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றதன் மூலம் அதிமுக மீதான கோபம் தேமுதிகவுக்கு சற்று குறைந்துள்ளது.

English summary
tn govt withdraw to defamatory case againist vijayakanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X