சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணை வாபஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுவடில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணையை தமிழக அரசு திருமப் பெற்றுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு அண்மையில் ஒரு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், ஒரு ஊரின் பெயரை எப்படி உச்சரிக்கிறோமே அப்படியே ஆங்கிலத்திலும் அதை எழுத வேண்டும் என்பதற்காக இந்த அரசாணை வெளியிடப்பட்டது.

Coimbatore இல்லை Koyampuththoor.. 1018 ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல உச்சரிக்க, எழுத அரசாணைCoimbatore இல்லை Koyampuththoor.. 1018 ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல உச்சரிக்க, எழுத அரசாணை

THINDUKKAL

THINDUKKAL

உதாரணமாக திண்டுக்கல் என்பது வழக்கத்தில் DINDIGUL என உள்ளது. இதனை THINDUKKAL என மாற்ற வேண்டும் என அரசாணை பிறப்பித்திருந்தது. மொத்தம் 1018 ஊர்களின் பெயர்களை இதேபோல் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டிருந்தது.

விமர்சனங்களும் இருந்தன

விமர்சனங்களும் இருந்தன

இந்த அரசாணையை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் எழுந்ததன. தமிழக அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் தமிழக அரசின் இந்த முயற்சி முதல் கட்ட நடவடிக்கை என்கிற அளவில் பொதுவாக வரவேற்பைப் பெற்றது.

பஞ்சாயத்தில் கோயம்புத்தூர்

பஞ்சாயத்தில் கோயம்புத்தூர்

அதேநேரத்தில் பல ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் குழப்பங்களும் இருந்து. உதாரணமாக Coimbatore என்பதை Koyampuththoor என எழுத வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் நாங்கள் இதனை பின்பற்றப் போவதில்லை என ஒருதரப்பு சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்தது சர்ச்சையானது.

அரசாணை வாபஸ்

அரசாணை வாபஸ்

இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழக அரசின் இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்ட்டுள்ளது.இது தொடர்பாக வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டும் வருகிறது. iபுதிய அரசாணையானது அடுத்த 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்பட உள்ளது என்று மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Tamilnadu Govt today Withdraws tis GO for English names changed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X