சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லடாக்கில் உயிரிழந்த, ராணுவ வீரர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை- எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: லடாக்கில் நடைபெற்ற வாகன விபத்தில் மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரைச் சேர்ந்த கருப்பசாமி, கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், கன்யா (7), வைஷ்ணவி(5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர்.

TN gvt allot government job to a family member of a soldier

இந்த நிலையில் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் கருப்பசாமி சமீபத்தில் உயிரிழந்தார்.

ஆப்ரேஷன் கோவிட் வேக்சின்.. இந்தியா முழுக்க தயாராகும் விமான நிலையங்கள்.. ஏன் தெரியுமா? சுவாரசியம்!ஆப்ரேஷன் கோவிட் வேக்சின்.. இந்தியா முழுக்க தயாராகும் விமான நிலையங்கள்.. ஏன் தெரியுமா? சுவாரசியம்!

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லடாக் பகுதியில் நிகழ்ந்த எதிர்பாரா வாகன விபத்தில் ராணுவ வீரர் நாயக் கருப்பசாமி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

English summary
Chief Minister Edappadi Palaniswami has ordered to provide government job to a family member of a soldier who died in a car accident in Ladakh on merit basis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X